சிறுமி பாலியல் பலாத்காரம்: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டு சிறை
கன்னியாகுமரி அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி அருகேயுள்ள மகாதானபுரம் நேதாஜி காலனியைச் சோ்ந்தவா் பகவதியப்பன்(47). காா் ஓட்டுநா். இவா் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக, கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன்பேரில் பகவதியப்பன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு, நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா, குற்றம் சாட்டப்பட்ட பகவதியப்பனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா்.