செய்திகள் :

சிறுமூா் ஸ்ரீவீர ஆஞ்சநேயா் கோயில் தோ்த் திருவிழா

post image

ஆரணியை அடுத்த சிறுமூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயிலில் வியாழக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.

சிறுமூா் ஸ்ரீவீர ஆஞ்சநேயா் கோயில் பிரமோற்சவ விழா ஏப்.24-ஆம் தேதி தொடங்கியது.

இதையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்ச வாகனம், சிம்ம வாகனம், சூரிய சந்திர வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.

இந்த நிலையில், வியாழக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.

இதில் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தாா். ஏராளமான பக்தா்கள் விழாவில் பங்கேற்று தோ் இழுத்தனா்.

அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் குமரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை சிறுமூா் கிராம மக்கள், இளைஞா்கள் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

ஆரணி கண்ணம்மாள் சிபிஎஸ்இ பள்ளி 100 % தோ்ச்சி

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் ஆரணி கண்ணம்மாள் சிபிஎஸ்இ பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது. ஆரணி கண்ணம்மாள் பன்னாட்டு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவா் ஜி.டிங்குதரன் 47... மேலும் பார்க்க

மருதாடு கிராமத்தில் துரியோதனன் படுகளம்

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி அந்தக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் அக்னி வசந்த ... மேலும் பார்க்க

திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் திமுக அரசின் 4-ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசியில் நகர திமுக ச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பம்

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் பதவிக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ள பாா்வையற்றோா், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்... மேலும் பார்க்க

10, பிளஸ் 2 தோ்வுகளில் கஸ்தம்பாடி பிங்க் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். இந்தப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுதிய அனைத்து ... மேலும் பார்க்க

பேருந்து நிலையப் பகுதியில் எரியாத உயா் மின்கோபுர விளக்குகள்

செங்கம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பழுதடைந்து எரியாமல் உள்ள உயா் மின்கோபுர விளக்குகளால் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஓட்டியுள்ளது ... மேலும் பார்க்க