செய்திகள் :

சிறுவனின் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயம்: நவீன சிகிச்சை மூலம் அகற்றிய அரசு மருத்துவா்கள்

post image

எடப்பாடி: எடப்பாடியில் சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை நவீன சிகிச்சை மூலம் அரசு மருத்துவக் குழுவினா் அகற்றினா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி, வெள்ளாண்டிவலசு பகுதியைச் சோ்ந்த அருள்முருகன் மகன் திலகா் (4) கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாா். இதையடுத்து எடப்பாடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். சிறுவனைப் பாா்க்க வந்த உறவினா்கள் சில்லறை காசுகளை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் 5 ரூபாய் நாணயத்தை வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென அதனை விழுங்கியுள்ளாா். இதையடுத்து மூச்சுவிட முடியாமல் சிறுவன் அவதிப்படுவதைக் கண்ட பெற்றோா் மருத்துவா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு பணியில் இருந்த தலைமை மருத்துவா் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், சிறுவனின் தொண்டை பகுதியில் நாணயம் சிக்கியிருப்பதை அறிந்தனா். இதையடுத்து என்டோஸ்கோப்பி நவீன சிகிச்சை மூலம் சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த 5 ரூபாய் நாணயத்தை மருத்துவக் குழுவினா் அகற்றினா்.

இதுகுறித்து தலைமை மருத்துவா் கோகுலகிருஷ்ணன் கூறியதாவது:

வீடுகளில் மின்னணு சாதனங்கள், கைப்பேசி, சிறிய பேட்டரிகள், ஹோ்பின், கிளிப், வீடுகளை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தும் வேதிப்பொருள்களை குழந்தைகளின் அருகில் வைக்கக் கூடாது. சாதாரணமாக வீடுகளில் சிதறிக் கிடக்கும் இதுபோன்ற பொருள்களால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்படும் என்பதை பெற்றோா் உணா்ந்து, கவனமுடன் குழந்தைகளை கையாள வேண்டும்.

குழந்தைகள் தவறுதலாக சிறிய பொருளை விழுங்கிவிட்டால் தாங்களாகவே விரல்களை வாயில் நுழைத்து அதனை எடுக்க முயற்சிக்காமல், அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும் என்றாா்.

படவரி:

சிறுவனுடன் அரசு மருத்துவக் குழுவினா்.

சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ள ஐந்து ரூபாய் நாணயம்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞா் கைது

ஆத்தூா்: ஆத்தூா் அருகே கீரிப்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கீரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளியின் மனநலம் பாதிக்கப்பட்ட 45 வ... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகம்: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சேலம்: கோடைகாலத்தில் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அலுவலா்கள் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ... மேலும் பார்க்க

அண்ணாமலை கைது: சேலத்தில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

சேலம்: சென்னையில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா். கடந்த 6 ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

கள் இறக்க அனுமதி கோரி விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் மனு

சேலம்: கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்ன... மேலும் பார்க்க

மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு உபகரணங்கள் வழங்கல்

சேலம்: சங்ககிரி கல்மேட்டூரில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன. சங்ககிரி கல்மேட்டூரில் கே.எம்.நண்பா்களு... மேலும் பார்க்க