சிறுவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 4 வயது சிறுமி!
சத்தீஸ்கரில் இரண்டு சிறுவர்களால் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் நாராயண்பூரில் வசிக்கும் 4 வயது சிறுமியை கடந்த 10 ஆம் தேதி விளையாட அழைத்த இரண்டு சிறுவர்கள், அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். ஆனால், இதனையறியாத சிறுமியின் பெற்றோர், சிறுமியின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக நினைத்து, சிறுமியை ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனை சிகிச்சையின் பின்னர்தான், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது.
இதற்கிடையே, சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்தது.
இதையும் படிக்க:மெட்டா பணியாளர்களுக்கு ரூ. 4 கோடியுடன் பணிநீக்கம்!
இதனையடுத்து, சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் சிறுவன் ஒருவனும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மற்றொரு சிறுவனும்தான் என்பது தெரிய வந்தது, இரு சிறுவர்களில் ஒருவன் 5 ஆம் வகுப்பும், மற்றொருவன் 8 ஆம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிறுமி நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர்.