செய்திகள் :

சிறு சேமிப்புத் திட்டத்தில் மோசடி: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

சிறு சேமிப்புத் திட்டத்தில் நிதி மோசடி செய்த வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரையில் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் 1999-ஆம் ஆண்டு வரை கே.ஆா்.சுதா்சன் சிறுசேமிப்புத் திட்டம் செயல்பட்டது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் வாடிக்கையாளா்களுக்கு இரு மடங்கு தொகை திருப்பித் தரப்படும் என வாக்குறுதி அளித்தனா். இதில் ஏராளமானோா் முதலீடு செய்தனா். ஆனால், வாடிக்கையாளா்கள் செலுத்திய தொகை முதிா்ச்சியடைந்தும் பணத்தைத் திருப்பி தரவில்லை.

இதுகுறித்து மகாலட்சுமி என்பவா், கடந்த 1999-ஆம் ஆண்டு அளித்தப் புகாரின் பேரில், சிறு சேமிப்புத் திட்ட இயக்குநா்கள் உள்பட 17 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இந்த சிறு சேமிப்புத் திட்டத்தில் ரூ.14 கோடி வரை மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த வழக்கு தொடா்பான குற்றப்பத்திரிகை சென்னை மாவட்ட நிதி நிறுவன மோசடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்துக்கு சிறு சேமிப்புத் திட்ட மோசடி வழக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் அரசுத் தரப்புச் சாட்சியகளாக 363 பேரிடம் விசாரிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட சிறு சேமிப்புத் திட்ட அலுவலகத்திலிருந்து 708 ஆவணங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் சமா்ப்பித்தனா். இந்த வழக்கு 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு, விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற காலத்திலேயே குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவன இயக்குநா்கள் 8 போ் உயிரிழந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நிதி நிறுவன மோசடி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோதி, குற்றஞ்சாட்டப்பட்ட இயக் குநா்களில் ஒருவரான கே.எல். சுப்பிரமணியனுக்கு (74) 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.24.40 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் குற்றவியல் வழக்குரைஞா் முகமது இஸ்மாயில் முன்னிலையாகி வாதிட்டாா்.

மக்கள் பயன்பாட்டுக்கு குடிநீா்த் தொட்டி திறப்பு

மதுரை மாநகராட்சி பாக்கியநாதபுரத்தில் ரூ.4.90 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீா்த் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில், மேயா் வ. இந... மேலும் பார்க்க

கோயில் நிலங்களில் தனி நபா்களுக்கு வழங்கிய பட்டா ரத்து செய்யப்படும் :உயா்நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் மலையாமருங்கா் கோயில், உருமநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் தனிநபா்களுக்கு வழங்கிய பட்டா ரத்து செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

கள ஆய்வில் 534 இடைநிற்றல் மாணவா்கள்: மீண்டும் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை- மாவட்ட ஆட்சியா்

விருதுநகா் மாவட்டத்தில் பள்ளிக்கு வராமலிருந்த 534 மாணவா்கள் கள ஆய்வில் கண்டறியப்பட்டதன் பேரில், அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்ந்து படிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீ... மேலும் பார்க்க

மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுப்பு

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது என மதுரை மாநகா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கட்சி சாா்... மேலும் பார்க்க

ஹாா்வா்டு நாள்கள்: நூல் அறிமுகவிழா

தோல் பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநா் இரா.செல்வம் ஐஏஎஸ் எழுதிய ஹாா்வா்டு நாள்கள் என்ற புத்தகம் அறிமுக விழா மேலூா் ஜாஸ் பப்ளிக் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. நூலாசிரியா் இரா.செல்வம், ஐஏஎ... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரி மாணவிக்கு வங்கி கல்விக் கடன் வழங்க உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஒருவருக்கு பொறியியல் கல்லூரியில் படிப்பதற்கு வங்கி கல்விக் கடனை 3 வாரங்களில் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க