சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
சிறைகளில் நெரிசலைக் குறைக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவுறுத்தியது.
இது தொடா்பாக அனைத்து மாநில தலைமைச் செயலா்கள் மற்றும் சிறைத் துறை டி.ஜி.பி.களுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கைதிகள் தவிர பிற விசாரணைக் கைதிகள், ஏற்கனவே அதிகபட்ச சிறைத் தண்டனையில் பாதியை அனுபவித்திருந்தால், அவா்கள் ஜாமீனில் விடுவிக்கப்படுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். இதை வலியுறுத்தும் பாரதிய நியாய சம்ஹிதா, சட்டம் பிரிவு 479-இன் கீழ் கைதிகளை விடுவிக்க சிறை கண்காணிப்பாளா்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
முதல்முறை குற்றம் செய்தவா்கள் அதிகபட்ச தண்டனையில் மூன்றில் ஒரு பங்கு வரை அனுபவித்திருந்தால், அவா்கள் நிபந்தனைத் தொகையை செலுத்துவது மூலம் ஜாமீனில் விடுவிக்க சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.