செய்திகள் :

சில்க் ஸ்மிதா பிறந்த நாள்: தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்து; உற்சாகமாக கொண்டாடிய ஈரோடு ரசிகர்!

post image

1980களில் தொடங்கி 1996ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தவர். அவர் மறைந்து 28 ஆண்டுகளாகியும் அவரது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார் ஈரோடு, அகில்மேடு வீதியில் டீக்கடை நடத்தி வரும் குமார்.

சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான குமார் தனது டீக்கடை முழுவதும் எந்தப் பக்கம் திரும்பினாலும் சில்க் ஸ்மிதாவின் பல படங்களை ஒட்டி வைத்துள்ளார். சில்க் ஸ்மிதாவின் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும், அவரது பிறந்த நாளன்று ஏழை, எளிய மக்களுக்குத் தன்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் குமார்.

ஆடை வழங்கிய குமார்

அந்த வகையில், இந்த ஆண்டும் சில்க் ஸ்மிதாவின் 65வது பிறந்த நாளை தூய்மைப் பணியாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியதுடன், அவர்களுக்குப் புத்தாடை மற்றும் உணவு வழங்கியுள்ளார் குமார். இதுதொடர்பாக அவரிடம் பேசுகையில், "சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகனான நான், கடந்த 18 ஆண்டுகளாக சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாளன்று எனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், ஏழை மக்களுக்கு இனிப்பு கொடுத்துக் கொண்டாடிவருகிறேன்.

விருந்து பரிமாறல்

சோதனையான காலகட்டத்தில் கூட எனது டீக்கடையில் ஒட்டி வைத்துள்ள சில்க்கின் கறுப்பு, வெள்ளை புகைப்படத்தையும், அவரது கண்களையும் சற்று நேரம் உற்று நோக்குவேன். அதில் எனக்கான சோகம் எல்லாம் பறந்துவிடும். கடந்த ஆண்டு முதல் தூய்மைப் பணியாளர்களுக்குச் சேலைகள், சர்ட்கள் வழங்கியும், கேக் வெட்டியும் சில்கின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடி வருகிறேன். 2025ஆம் ஆண்டிற்கான சில்க் ஸ்மிதா படத்துடன் கூடிய காலண்டரையும் வழங்கியுள்ளேன். இதில் எனக்கு ஒருவித மனநிம்மதி கிடைக்கிறது" என்றார் மகிழ்ச்சியுடன்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Bihar: 'முட்டை விற்பவரின் மகன் டு நீதிபதி' - கல்வியால் சாதித்த பீகார் இளைஞர்!

பீகாரில் முட்டை விற்பவரின் மகன் ஒருவர் நீதித்துறை சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதியாகியிருக்கிறார்.அவுரங்காபாத் மாவட்டத்தின் ஷிவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் குமார் என்ற இந்த இளைஞர், பீகார் பப்... மேலும் பார்க்க

``நான் செஞ்சது சின்ன விசயம் தான்; வாழ்நாள் உள்ளவரை...'' - தாய்க்கு சிலை வடித்த இளைஞர் உருக்கம்!

`நலமோடு இருக்கும்போதே நன்றிக்கடன் செஞ்சுடணும்!' நம்மை வாழ்க்கையில் உயரத்திற்கு ஏற்றிவிடும் ஏணியாக இருக்கும் பெற்றோரை, கடைசிக்காலத்தில் அவர்களை கறிவேப்பிலையாக நம்மில் சிலர் முதியோர் இல்லத்தில் சேர்த்து... மேலும் பார்க்க

Warren Buffett: தொடரும் நன்கொடை... இந்த முறை 1.2 பில்லியன் டாலரை அள்ளிக்கொடுத்த வாரன் பஃபெட்!

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஹாத்வே நிறுவனத் தலைவரும், உலகின் பணக்காரர்களில் ஒருவருமான வாரன் பஃபட் தன் சொத்துகளில் 1.2 பில்லியன் டாலர் சொத்துகளை தன் அறக்கட்டளைக்கு வழங்கியிருக்கிறார். வாழ்நாளுக்குள்ளு... மேலும் பார்க்க

'கடனை கட்டு!' நெருக்கிய குழுத் தலைவி; ரூ.90,000 கடனை தள்ளுபடி செய்த ஆட்சியர்-நெகிழ்ந்த தொழிலாளி

திருச்சி மாநகரம், பாலக்கரை தாமோதரன் எடத்தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது: 42). கூலித் தொழிலாளியான இவர், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளி. இவர்களு... மேலும் பார்க்க

''விலா எலும்பு உடைஞ்சும் எங்கம்மா கருவை கலைக்கல'' - ஒரு கலெக்டரின் கதை

''எங்கம்மா அப்போ அஞ்சு மாச கர்ப்பிணியா இருந்தாங்க. ஒருநாள் அங்கன்வாடிக்காக தண்ணி எடுத்துட்டு குடத்தை இடுப்புல வெச்சுக்கிட்டு நடந்து வந்திருக்காங்க.அந்த நேரத்துல யாரோ ஒருத்தர் டூ வீலரை அம்மா மேல மோதியி... மேலும் பார்க்க

`இனிமே பயப்பட மாட்டேன்கா..!’ - விபத்தில் கால்களை இழந்த விஜய்; கடை வைத்து கொடுத்த விகடன் வாசகர்கள்

ரயில் விபத்தில் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்த வாணியம்பாடியைச் சேர்ந்த விஜய்யையும், 'கால் இல்லைன்னா என்ன; தாலிக்கட்ட கை தானே வேணும்' என்று, விஜய்யை மருத்துவமனையிலேயே திருமணம் செய்துகொண்ட ஷில்பாவைய... மேலும் பார்க்க