செய்திகள் :

சீனாவுக்கு 3 மாதம்; இந்தியாவுக்கு 3 வாரம்! அமெரிக்காவுக்கும் 50% வரிவிதிக்க காங்கிரஸ் கோரிக்கை!

post image

அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு மத்தியில், பிற வர்த்தகக் கூட்டாளிகளைப் பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

ரஷியாவிடம் நீண்டகாலமாகவே எண்ணெய் வாங்கி வரும் இந்தியா மீது முதலில் 25 சதவிகித வரி அறிவித்தார். தொடர்ந்து, மேலும் 25 சதவிகித வரியை விதித்தார், டிரம்ப்.

அமெரிக்காவுடன் நல்ல நட்புறவைக் கொண்டிருக்கும் இந்தியா மீது 50 சதவிகித வரிவிதிப்பு என்பது ஏற்கத்தக்கதல்ல என்று பல்வேறு நாடுகளும் கூறி வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி தரும்விதமாக இந்தியாவும் 50 சதவிகித வரியை அவர்கள் மீது விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் சசி தரூர் பேசுகையில், அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் 17 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் 50 சதவிகிதம் விதிக்கின்றனர்.

நாம் மட்டும் ஏன் 17 சதவிகிதத்துடன் நிறுத்த வேண்டும்? நாமும் 50 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும். இந்தியாவைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை என்றால், நாமும் அவர்களைப் பற்றி கவலைப்படக் கூடாது.

நம்முடைய நட்பு நாடு என்று நினைத்த அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது, நட்பார்ந்த விஷயம் அல்ல. இவற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில்தான், நாம் பிற வர்த்தகக் கூட்டாளிகளைப் பார்க்க வேண்டும்.

யுரேனியம், பல்லேடியம், உரம் போன்ற பொருள்களை ரஷியாவிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இது அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடே.

சீனாதான் இந்தியாவைவிட ரஷியாவிடமிருந்து அதிகளவில் எண்ணெய் வாங்குகிறது. ஆனால், சீனாவுக்கு மட்டும் 90 நாள்கள் கெடு விதித்துள்ளனர்; நமக்கு 3 வாரங்கள் மட்டுமே.

இதையும் படிக்க:புதின் இந்தியா வருகை! டிரம்ப்புக்கு எதிராக இந்தியா - ரஷியா கூட்டு சேருமா?

Trump Doubles India Tariffs, Shashi Tharoor's Advice On Next Steps

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்!

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை இன்று(ஆக. 10) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ஊதா மற்றும் பச்சை தடங்களில் வழங்கப்படுகின்றன. ... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் டூல் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் வெடித்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.குல்காம் மாவட்டத்தின் அகல... மேலும் பார்க்க

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

அமெரிக்காவுடன் வா்த்தகப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ‘இந்தியா, தனது தேசிய-உத்திசாா் நலன்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது; எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது’ என்று முன்னாள் குடியரசு துணைத் ... மேலும் பார்க்க

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் வரி விதிப்பால் உலக அளவில் நிலவும் வா்த்தக நிச்சயமற்ற சூழலில் இருந்து உள்நாட்டுத் தொழில் துறையினரைப் பாதுகாக்க ரூ.2,250 கோடி மதிப்பீட்டில... மேலும் பார்க்க

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை எதிா்த்தது ஆா்எஸ்எஸ்: காங்கிரஸ்

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது, ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவா்களும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனா்; அதேநேரம், இந்த இயக்கத்துக்கு ஆா்எஸ்எஸ் அமைப்பு எதிா்ப்பு தெரிவித்தது என்று காங்கிரஸ் கூறியுள்ளது... மேலும் பார்க்க

சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி

உலக சம்ஸ்கிருத தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடி, ‘சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது’ என்றாா். சம்ஸ்கிருத பாரம்... மேலும் பார்க்க