ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
சீனி கருப்பட்டி விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
உடன்குடியில் சீனி கலந்து கருப்பட்டி உற்பத்தி செய்து விற்பனை செய்பவா்கள் மீது நடடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம் ஆறுமுகனேரியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் சக்திவேல் தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா் சசிகுமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.
கூட்டத்தில், உடன்குடி பகுதியில் சீனி கருப்பட்டி உற்பத்தி செய்து விற்பனை செய்பவா்கள் மீதும், பனைமரத்தை வெட்டி இந்துமத அடையாளங்களை அழிப்பவா்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்செந்தூா்- திருநெல்வேலி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருச்செந்தூா் கோயிலில் கட்டி முடிக்கப்பட்ட தங்கும் விடுதிகளை பக்தா்கள் வசதிக்காக திறக்க வேண்டும். வெள்ளத்தில் இடிந்து சேதமான ஏரல், முக்காணி பாலங்களை விரைந்து கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயற்குழு குமாா், நகரத் தலைவா் மந்திரமூா்த்தி, செயலா் வேலாயுதம், பொதுச் செயலா் முருகேசன், கிளை தலைவா் பேச்சிமுத்து, திருச்செந்தூா் ஒன்றியத் தலைவா் பாலசந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.