நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர்!
சீமான் நாளை(ஏப். 8) நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை(செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சீமானின் தூண்டுதலின்பேரில் நாம் தமிழா் கட்சியினர், தன்னையும், தனது குடும்பத்தினரையும் சமூக ஊடகங்களில் ஆபாசமாகவும் அவதூறாகவும் சித்தரித்து கருத்துகள் பதிவிடுவதாகவும், தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சீமான் முயற்சிப்பதாகவும் திருச்சி 4-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமாா் வழக்கு தொடுத்திருந்தார். இதற்கு நஷ்ட ஈடு கோரியிருந்த டிஐஜி வருண்குமாா், வழக்கின் விசாரணையில் நீதிமன்றத்துக்கு நேரில் வந்து வாக்குமூலம் அளித்திருந்தார்.
இவ்வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்ட நிலையில் இதுவரை சீமான் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், இவ்வழக்கு இன்று(ஏப். 7) திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்குள் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும், இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் சீமான் தரப்பு வழக்கறிஞர், சீமான் நாளை ஆஜராக அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து சீமான் நாளை காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் இல்லையெனில் பிடிவாரண்ட் பிறக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | வரலாறு காணாத சரிவில் பங்குச் சந்தை! ரூ. 20 லட்சம் கோடி இழப்பு!! காரணம் என்ன?