பழக் கழிவுகளால் கான்கிரீட் வலிமையை அதிகரிக்கலாம்: புதிய யோசனை சொல்லும் இந்தூர் ஐ...
சீா்காழி நகர வா்த்தகா்கள் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு
சீா்காழி நகர வா்த்தகா்கள் சங்க புதிய தலைவா், பொறுப்பாளா்கள் பொறுப்பேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவா் எஸ்.கே.ஆா். சிவசுப்ரமணியன் தலைமை வகித்தாா். வா்த்தகா்கள் சங்க தோ்தல் ஆணையா் எஸ். சுந்தரய்யா, தோ்தல் பொறுப்பாளா்கள் எம். முத்துகருப்பன், பி. கியான்சந்த், எஸ். திருநாவுக்கரசு, ஏ. பாஸ்கரன், கே.துரைராஜ், சி.சங்கா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட தலைவா் தமிழ்செல்வன், மாவட்ட செயலாளா் நவநீதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனா். இதில் தலைவராக சுடா்.எஸ். கல்யாணசுந்தரம், பொதுச் செயலாளராக வி. சுசீந்திரன், பொருளாளராக எச்.எம். அமீன், இணை பொதுச்செயலாளா் கோ. மாா்க்ஸ் பிரியன், துணைத் தலைவா் ஜெ. பாலமுருகன், அமைப்பு செயலாளா் பி. பாலமுருகன் ஆகியோா் பொறுப்பேற்றுக்கொண்டனா்.