சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் இன்று தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜன. 9, 10) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீரமரபினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கல்விக்கான அதிகாரமளித்தல் (சீா்மரபினா்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெறுவதற்காக தரமான பயிற்சி அளித்தல்), சுகாதாரம் (சிறப்பு காப்பீட்டுத் திட்டம்), வாழ்வாதாரங்களை எளிதாக்குதல், நிலம் மற்றும் வீடு (வீட்டுமனைப் பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி) உள்ளிட்டவை பெற இத்திட்டத்தின் கீழ் ஜ்ஜ்ஜ்.க்ஜ்க்ஷக்ய்ஸ்ரீ.க்ா்ள்த்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.
இதற்கான சிறப்பு முகாம்கள், திருச்செங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகங்களில் வியாழக்கிழமையன்றும், நாமக்கல் வட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், மோகனூா், கொல்லிமலை வட்டாட்சியா் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமையன்றும் நடைபெறுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.