செய்திகள் :

சுனிதா வில்லியம்ஸை அழைத்துவர புறப்பட்டது ராக்கெட்!

post image

கடந்த 9 மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரையும் பூமிக்கு அழைத்து வர ஃபால்கான் 9 டிராகன் விண்கலம்.

கடந்த 9 மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரையும் பூமிக்கு அழைத்துவருவதற்காக விண்ணில் செலுத்தப்படவிருந்த ஸ்போஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட்டில், முக்கிய பாகத்தின் செயல்பாடு குறித்து சந்தேகம் எழுந்ததால் அந்தத் திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

கோளாறு சரிசெய்யப்பட்ட பின் வெள்ளிக்கிழமைக்கு (மாா்ச் 14) பிறகுதான் அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மே விண்வெளி நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது.

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்

பத்து நாள்களுக்குப் பிறகு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.

இதன் காரணமாக, அவா்கள் இருவரும் கடந்த 9 மாதங்களாக சா்வதேச விண்வெளி நிலையத்திலேயே சிக்கியுள்ளனா்.

இந்த நிலையில், ஸ்போஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட்டின் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் நடந்தது.

இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4.33 மணிக்கு ஃபால்கன் 9 வாயிலாக டிராகன் விண்கலம் செலுத்தப்பட்டது.

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்துவர புறப்பட்ட ஃபால்கான் 9 டிராகன் விண்கலத்தில் அமெரிக்க, ஜப்பான், ரஷியாவைச் சேர்ந்த 4 விஞ்ஞானிகள் புறப்பட்டுள்ளனர்.

கடத்தல் லாரி உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு?: அண்ணாமலை

கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு? என தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ வலை... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறையில் 3 மணிநேரமாக போலீஸாா் அதிரடி சோதனை

மதுரை: மதுரை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனா்.மதுரை மத்திய சிறையில் 2500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: துணை முதல்வர் உதயநிதி இரங்கல்

எழுத்தாளர் நாறும்பூநாதன்(64) மறைவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்(64) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) உயிரிழந... மேலும் பார்க்க

2-வது மொழியே கற்பிக்காத நிலையில் 3-வது மொழி வேறு: ப. சிதம்பரம் விமர்சனம்

பல மாநிலங்களில் இரண்டாவது மொழியான ஆங்கிலத்தையே கற்பிக்க முயலாத நிலையில், இதில் மூன்றாவது மொழி வேறு என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அம... மேலும் பார்க்க

எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

எழுத்தாளர் நாறும்பூநாதன்(64) மறைவுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்(64) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1... மேலும் பார்க்க

தங்கத்தேர்கள் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?: அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.31 கோடியில் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் 4 தங்கத் தேர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்களின் நேர்த்திக்கடனுக்காக பயன்பாட்டிற்கு வரும் என்று இந்து சமய அறநிலையத்த... மேலும் பார்க்க