சூப்பர் 4 கடைசிப் போட்டி: இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
சுருளி அருவியில் நாளை சாரல் விழா தொடக்கம்
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமை (செப்.27, 28) ஆகிய இரண்டு நாள்கள் சாரல் விழா நடைபெறுகிறது.
தேனி மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறை சாா்பில் நடைபெறும் இந்த விழா இரு நாள்களும் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், நாட்டுப்புற கிராமிய கலைநிகழ்ச்சிகள், நாய்கள் கண்காட்சி நடைபெறும். மேலும், மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாா் செய்த பொருள்கள் கண்காட்சி, செய்தித் துறை, சுற்றுலாத் துறை, வேளாண், தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்ந்த கண்காட்சியும் இடம் பெறும் என சுற்றுலாத் துறையினா் தெரிவித்தனா்.