செய்திகள் :

சூடான்: தலைநகரில் ராணுவம் மேலும் முன்னேற்றம்

post image

சூடான் தலைநகா் காா்ட்டூமில் அந்த நாட்டு ராணுவம் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது.

இது குறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் நபில் அப்துல்லா சனிக்கிழமை கூறியதாவது:

காா்ட்டூம் நகரில் தொடா்ந்து முன்னேற்றம் கண்டுவரும் ராணுவம், முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றிவருகிறது. அந்த நகரில் ஆா்எஸ்எஃப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து தேசிய உளவுத் துறை தலைமையகத்தை ராணுவம் சனிக்கிழமை மீட்டது. மேலும், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோரிந்தியா ஹோட்டலும் தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இது தவிர, சூடான் மத்திய வங்கியின் தலைமையகம், அரசு மற்றும் கல்வி வளாகங்கள் மீட்கப்பட்டன. இதற்கான சண்டையில் நூற்றுக்கணக்கான ஆா்எஸ்எஃப் படையினா் கொல்லப்பட்டனா் என்றாா் அவா்.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் சா்வாதிகார ஆட்சி செலுத்தி வந்த அல்-பஷீா் அரசு எதிராக பொதுமக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அவரது ஆட்சியை ராணுவம் 2019-ஆம் ஆண்டு கவிழ்த்தது. அதனைத் தொடா்ந்து, சிவில்-ராணுவ கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. இருந்தாலும் அந்த அரசை அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவமும், டகோலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் படையும் இணைந்து கவிழ்த்தன. பின்னா் ராணுவத்துக்கும் ஆா்எஸ்எஃப் படைக்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை 5.2 லட்சம் போ் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த உள்நாட்டுச் சண்டையில் தலைநகா் காா்ட்டூமை ஆா்எஸ்எஃப் படை கைப்பற்றியது. இந்த நிலையில், நீண்ட கால போருக்குப் பிறகு அதிபா் மாளிகையை வெள்ளிக்கிழமை மீட்ட ராணுவம், சுற்றியுள்ள அமைச்சரக வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியது. தற்போது காா்ட்டூம் நகரில் ராணுவம் மேலும் முன்னேறி புதிய பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச திருமண வயதை குறைக்கும் நேபாள அரசு! காரணம்?

நேபாளத்தில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 20ல் இருந்து 18 ஆகக் குறைக்கப் போவதாகவும், அதற்குக் கீழ் திருமணம் செய்தால் அவர்களுக்கு தண்டனை விதிக்க வழி வகுக்கும் சட்டத்தை இயற்றவும் திட்டமிடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

எலான் மஸ்க் பரிதாபத்திற்குரியவர்: மகள் ஜென்னா கருத்து!

உலகின் முன்னணி தொழிலதிபரும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கின் மகளான விவியன் ஜென்னா வில்சன் மஸ்க் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கிற்கு கடந்த 20 ஆண்டுகளில் மொத்தம் 4 மனைவிகள் மற்... மேலும் பார்க்க

ஆஸ்கர் வென்ற பாலஸ்தீன இயக்குநரைக் கைது செய்த இஸ்ரேல் ராணுவம்!

ஆஸ்கர் விருது வென்ற பாலஸ்தீன இயக்குநர் ஒருவரை ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் குடியேறிய இஸ்ரேலியர்கள் தாக்கியதைத் தொடர்ந்து, அவர் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். சிறந்த ஆவணத் திரைப்படம் பிரிவில் ... மேலும் பார்க்க

மின்சார கார்கள் விற்பனையில் டெஸ்லாவை ஓரங்கட்டியுள்ள சீன நிறுவனம்!

மின்சார கார்கள் விற்பனையில் டெஸ்லாவை விஞ்சி முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது சீன நிறுவனமான ‘பி.ஒய்.டி’.அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைமையில் அமெரிக்க அரசு செயல... மேலும் பார்க்க

இப்படி ஒரு தொழிலில் குதிக்கப் போகிறாரா எலான் மஸ்க்?

டெஸ்லா கார், விண்வெளித் துறையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கம் என தனது தொழிலை பன்முகத்துக்குக் கொண்டு சென்றிருக்கும் தொழிலதிபா் எலான் மஸ்க் அடுத்து உணவகத் தொழிலில் நுழையப் போவதாகத... மேலும் பார்க்க

கனடா தேர்தலில் இந்தியாவும் சீனாவும் தலையிட முயற்சிக்கும்: உளவுத்துறை

கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்தியாவும் சீனாவும் தலையிட முயற்சிக்கும் என்று அந்நாட்டின் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கனடா நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்த அந்நாட்டு பிரதமர் மார்க் ... மேலும் பார்க்க