இப்படி ஒரு தொழிலில் குதிக்கப் போகிறாரா எலான் மஸ்க்?
டெஸ்லா கார், விண்வெளித் துறையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கம் என தனது தொழிலை பன்முகத்துக்குக் கொண்டு சென்றிருக்கும் தொழிலதிபா் எலான் மஸ்க் அடுத்து உணவகத் தொழிலில் நுழையப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெஸ்லாவின் இரவு நேர உணவு, திரையரங்கம் மற்றும் கார்களுக்கு சார்ஜ் போடும் நிலையம் என ஒன்றிணைந்த வளாகங்களின் திறப்பு விரைவில் நடைபெறலாம் என்றும், தேதிதான் உறுதி செய்யப்படவில்லையே தவிர, இந்த உணவகத் தொழிலில் இறங்குவது உறுதியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
லாஸ் ஏஞ்சலீஸ் நகரில், இரவு நேர உணவகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், 1950ஆம் ஆண்டுகளில் இருந்தது போல டிரைவ் இன் திரையரங்குகள் பாணியில் சார்ஜ் போட்டுகொள்ளும் வசதியுடன் கார்களை நிறுத்திவிட்டு, படம் பார்த்துக்கொண்டே உணவு சாப்பிடும் வகையில் இந்த உணவகங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, 2023ஆம் ஆண்டு எலான் மஸ்க் தனது உணவகத் தொழில் குறித்து அறிவித்திருந்தார். அதனை தற்போது செயல்பாட்டுக்குக் கொண்டு வரவிருக்கிறார். அதன்படி, வாகனத்தில் அமர்ந்தபடி படம் பார்த்துக்கொண்டே உணவருந்தும் பழைய முறைக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கான கட்டுமானப் பணிகள் 2023 செப்டம்பர் மாதம் முதல் ஏராளமான பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்களைக் கண்டு நடத்தப்பட்டுள்ளது. இங்கு மிகப்பெரிய இரண்டு திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. டெஸ்லா செயலியிலும் உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் பதிவேற்றம் செய்யும் பணிகளும் தொடங்கிவிட்டன.
ஒருவர், காருக்கு சார்ஜ் செய்ய வரும்போது அந்த நேரத்தை பயனுள்ளதாகக் கழிக்கும் வகையில் எலான் மஸ்க் இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
வைரலான விடியோ
புளோரிடா மாகாணத்தில் பாம் கடற்கரையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற எலான் மஸ்க், தனது சுண்டு விரலில் 2 ஸ்பூன், ஒரு ஃபோர்க்கை நிறுத்தி சாகசம் செய்த விடியோ வைரலாகியிருக்கிறது.
A grown man, not engaged with anyone, sitting at dinner with the President of the United States, playing with the silverware is mind-boggling.
— Texas Democrats ⭐️Collin County (@CollinDems) March 23, 2025
Most parents would be aghast if their child did this at home. We can only imagine how disconnected Elon Musk really might be. pic.twitter.com/AeYuhUJcnQ
இந்த இரவு உணவில் பங்கேற்க சுமார் ரூ.8.3 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் இது வைத்து இந்தியாவில் 40 ஸ்கார்பியோ கார்களை வாங்க முடியும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.