செய்திகள் :

சூப்பர்ஸ்டார் கலாசாரம் இந்திய அணியை முன்னேற்றாது: ஹர்பஜன் சிங்

post image

இந்திய அணியில் சூப்பர் கலாசாரம் ஒழிய வேண்டுமென முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கடுமையான விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் 1-3 என இந்திய மோசமாக தோல்வியுற்றது.

இதில் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மிக மோசமாக விளையாடினார்கள்.

விராட் கோலி 9 இன்னிங்ஸ்களில் 190 ரன்களும் ரோஹித் சர்மா 6 இன்னிங்ஸ்களில் 31 ரன்களும் எடுத்துள்ளார்.

பேட்டிங்கில் தொடர்ச்சியாக சொதப்பி வரும் இவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சூப்பர் கலாசாரம் குறித்து கூறியதாவது:

சூப்பர்ஸ்டார்கள் தேவையில்லை

சூப்பர் ஸ்டார் கலாசாரம் உருவாகிவருகிறது. நமக்கு சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை, நமக்கு தேவை சிறப்பாக விளையாடுபவர்கள். அவர்கள் இருந்தால்தான் அணி முன்னேறும்.

சூப்பர்ஸ்டார் ஆக நினைப்பவர்கள் தங்களது வீட்டில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டிக்கொள்ளவும். இந்திய அணிக்கு வரவேண்டாம்.

அடுத்தாக இங்கிலாந்து தொடர் வரவிருக்கிறது. இங்கிலாந்து தொடரில் யார் இருப்பார்கள், என்ன நடக்குமென அனைவரும் பேசுகிறார்கள். என்னைப் பொருத்தவரை யார் நன்றாக விளையாடுகிறார்களோ அவர்கள் செல்ல வேண்டும்.

ஒருவரின் மதிப்பை வைத்து தேர்வு செய்ய முடியாது. அப்படி செய்தால் கபில் தேவ், சுனில் கவாஸ்கரையும் அழைத்து செல்லுங்கள். சூப்பர்ஸ்டார் கலாசாரம் இந்திய அணியை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்லாது.

சூப்பர்ஸ்டார் கலாசாரம் அணியை முன்னேற்றாது

விராட் கோலி, ரோஹித் சர்மா என யாராக இருந்தாலும் அவர்களது செயல்பாடுகளை வைத்து தேர்வு செய்யுங்கள். விளையாட்டைவிட ஒருவரும் பெரியவர்கள் கிடையாது. அவர்களது மனதில் அவர்கள் பெரிய சூப்பர்ஸ்டாராக நினைத்தாலும் பரவாயில்லை. இந்திய அணியை முன்னோக்கி கொண்டுசெல்ல இதை செய்தாக வேண்டும்.

நான் அவர்களை கழட்டிவிட சொல்லவில்லை. இங்கிலாந்து தொடருக்கு முன்பாக அவர்களை கவுண்டி கிரிக்கெட் அல்லது வேறு எதாவது உள்ளூர் போட்டிகளில் முதல்தர கிரிக்கெட் விளையாட வேண்டும்.

இது தேர்வுக்குழுவுக்கு சவாலாக இருந்தாலும் இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும்.

யாருக்கு எவ்வளவு வாய்ப்பு கிடைக்கிறது. அதில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அணியில் எடுப்பதும் உட்காரவைப்பதும் நடக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவில் அதிக திறமைசாலிகள் இருக்கிறார்கள்.

விராட் கோலியின் எண்கள் கவலையளிக்கிறது. எனக்கு அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஒரு இளைஞருக்கு வாய்ப்பு தந்தாலும் அவரும் கோலியின் சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்றார்.

பொன் முட்டையிடும் வாத்தை கொல்வதா? பும்ரா கேப்டனாக எதிர்ப்பு!

ஜஸ்பிரீத் பும்ராவை இந்திய டெஸ்ட் அணியின் முழு நேர கேப்டனாக தேர்வு செய்யக்கூடாதென முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் 1-3 என இந்தியா தோல்வி அடைந்து அதிர்ச்ச... மேலும் பார்க்க

தொடரை வென்றது நியூசிலாந்து: ஆட்ட நாயகனாக ரச்சின் ரவீந்திரா தேர்வு!

இலங்கை உடனான 2ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணித் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்கள் வில் யங் 16 ரன்களில் ஆட்டமிழக்... மேலும் பார்க்க

ஓய்வுக்குப் பின் மார்டின் கப்டில் கூறியதென்ன? பயிற்சியாளர் ஆகிறாரா?

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: சிறிய வயதிலிருந்தே நியூசிலாந்து அணிக... மேலும் பார்க்க

ஓய்வை அறிவித்தார் மார்டின் கப்டில்!

நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவ... மேலும் பார்க்க

தனியாளாகப் போராடியவர் பும்ரா..! முன்னாள் வீரர் புகழாரம்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவிடம் பிஜிடி தொடரில் இந்திய அணி 1-3 எ... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை: ஸ்காட் போலண்ட் 29 இடங்கள் முன்னேற்றம்!

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஸ்காட் போலண்ட் 29 இடங்கள் முன்னேறி டாப் 10 வரிசைக்குள் நுழைந்துள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸி. வீரர் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக களமிறங்கிய ஸ்காட் போலண... மேலும் பார்க்க