செய்திகள் :

“சூப்பர் ஸ்டார் கலாசாரம்...” விராட் கோலியை சரமாரியாக விளாசும் முன்னாள் இந்திய வீரர்!

post image

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியை இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக, மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், இவர்கள் இருவரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் என்ன? கௌதம் கம்பீர் பதில்!

சூப்பர் ஸ்டார் கலாசாரம் ஒழிய வேண்டும்

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், விராட் கோலி உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதும் இல்லை, அவரது ஆட்டத்தில் உள்ள குறைகளை திருத்திக் கொண்டு விளையாடுவதும் இல்லை என இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சூப்பர் ஸ்டார் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். சூப்பர் ஸ்டார் கலாசாரம் ஒழிந்து இந்திய அணி கலாசாரம் உருவாக வேண்டும். வீரர் ஒருவர் தனிப்பட்ட விதத்தில் தன்னை மேம்படுத்திக் கொண்டு, அணியின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும். பார்டர் - கவாஸ்கர் தொடர் தொடங்குவற்கு முன்பு நிறைய போட்டிகள் இருந்தன. உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு மூத்த வீரர்களுக்கு இருந்தது. ஆனால், அவர்கள் விளையாடவில்லை. இந்த கலாசாரத்தை மாற்ற வேண்டும்.

இதையும் படிக்க: கோப்பையை வழங்க அழைக்கவில்லை; சுனில் கவாஸ்கர் அதிருப்தி!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்ல்கர் ரஞ்சி கோப்பையில் விளையாடியிருக்கிறார். அவர் விளையாட வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் இல்லை. இருப்பினும், அவர் விளையாடினார். கடைசியாக விராட் கோலி எப்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி பத்தாண்டுகளுக்கும் மேலாகிறது.

டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிப்பது மிகவும் முக்கியம். 2024 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால், விராட் கோலியின் சராசரி 15. கடந்த 5 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், அவரது சராசரி 30 கூட கிடையாது. இந்திய அணியில் அவர் தொடர்ந்து இடம்பெற வேண்டுமா? அவருக்குப் பதிலாக இந்திய அணியில் இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பளிக்கலாம்.

விராட் கோலி இந்திய அணிக்காக நிறைய பங்களிப்புகளை வழங்கியுள்ளார். நிறையப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடி தந்துள்ளார். ஆனால், அவர் மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்து ஆட்டமிழக்கிறார். அவர் செய்யும் தவறுகளுக்கு இடையில் இடைவெளியே இல்லை. தொடர்ச்சியாக ஒரே தவறை செய்கிறார். பேட்டிங்கில் அவரது தவறை அவர் திருத்திக் கொள்ளவில்லை என்றார்.

இதையும் படிக்க: மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது, ஆனால்.... ஜஸ்பிரித் பும்ரா கூறியதென்ன?

பார்டர் - கவாஸ்கர் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடிய விராட் கோலி வெறும் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

74 ஆண்டுகளுக்குப் பின்.. புதிய சாதனை படைப்பாரா தென்னாப்பிரிக்க கேப்டன்?

தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா 74 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வ... மேலும் பார்க்க

அணி வீரர்கள் காயம்: மாற்று வீரராக களமிறங்கிய உதவிப் பயிற்சியாளர்!

ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற டி20 போட்டியான பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணியின் வீரர்கள் பலர் காயத்தால் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதனால், அணியில் ஆள் பற்றாக்குறையால் அணியின் உதவிப் பயிற்சியா... மேலும் பார்க்க

தொடரை வெல்லுமா நியூசிலாந்து: இலங்கைக்கு 256 ரன்கள் இலக்கு!

இலங்கைக்கு எதிரான 2-வது போட்டியில் 256 ரன்கள் இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இந்தத்... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான் போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும்; அரசியல்வாதிகள் வலியுறுத்தல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டுமென பிரிட்டனைச் சேர்ந்த அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேத... மேலும் பார்க்க

இளைஞர்களின் கனவு நனவானது: டி10 டென்னிஸ் லீக் குறித்து யுவராஜ் சிங்!

டி10 டென்னிஸ் லீக் குறித்து முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.டிபிசிபிஎல் (டென்னிஸ் பந்து கிரிக்கெட் பிரிமீயர் லீக்) இந்தப் போட்டிகளை இந்தியாவின் 50 நகரங்களில் நடத்த திட்டம... மேலும் பார்க்க

தென்னாப்பிரிக்க லீக் தொடரில் இந்திய வீரர்களை பார்க்க விரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்!

தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் இந்திய வீரர்கள் விளையாடுவதற்கு எதிர்காலத்தில் பிசிசிஐ அனுமதிக்கும் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.இந்திய வீரரான தினேஷ் கார்த்தி... மேலும் பார்க்க