செய்திகள் :

சூர்யா - 46 படப்பிடிப்பு துவக்கம்!

post image

நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 46-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக உலகளவில் திரையரங்கம் மற்றும் ஓடிடி உள்பட இதர உரிமங்களுடன் ரூ. 235 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்துள்ளது.

ரெட்ரோவை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

அடுத்ததாக, நடிகர் சூர்யா தன் 46-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்க, நாக வம்சி தயாரிக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது. இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷும் நாயகிகளாக மமிதா பைஜு, ரவீனா டாண்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: அன்பான ரசிகர்களுக்கு நன்றி: ரூ.235 கோடி வசூலித்த ரெட்ரோ!

வடிவேலு குரலில் வெளியான மெட்ராஸ் மேட்னி பட பாடல்!

நடிகர் வடிவேலு குரலில் மெட்ராஸ் மேட்னி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.இந்தப் ... மேலும் பார்க்க

விஜய் ஆண்டனியின் புதிய பட பெயர்!

நடிகர் விஜய் ஆண்டனி - ஜென்டில்வுமன் இயக்குநர் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்... மேலும் பார்க்க

தக் லைஃப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! கால அளவு என்ன?

தக் லைஃப் திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் டிரைலர் ... மேலும் பார்க்க

கில் ரீமேக்கில் துருவ் விக்ரம்?

ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனம்பெற்ற கில் படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஹிந்தியில் கரண் ஜோஹர் தயாரிப்பில் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் கடந்த 2... மேலும் பார்க்க

800 நாள்களை நிறைவு செய்த மதிய நேரத் தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மதிய நேரத் தொடர் 800 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகிவருகிறது. சாம்பவி குருமூர்த்தி மற்றும் நந்தன் லோகநாதன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இலக்கியா தொடர், 800 நாள்க... மேலும் பார்க்க