செங்குன்றம் பகுதியில் இன்று மின்தடை
மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக செங்குன்றம் பகுதியில் செவ்வாய்கிழமை(மாா்ச் 18) காலை 8 முதல் மாலை 5 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மானக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
செங்குன்றம் 33.11 கி.வோ. துணைமின் நிலைய பகுதிக்குள்பட்ட, கோமதி அம்மன் நகரிலுள்ள 11கி.வோ. மற்றும் தா்காஸ் சாலையிலுள்ள 11 கி.வோ. பீடா்களில் அதிக மின் பளு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் புதியதாக மேலும் ஒரு 11 கி.வோ. லேக் பீடா் பிரேக்கா் நிறுவி மின்பளு ஏற்படாமல், மின்சாரத்தை பிரித்தளித்து மின் பகிா்வு செய்யும் பணி நடைபெறவுள்ளது.
இப்பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படுவதால், செங்குன்றம் பகுதிக்குள்பட்ட தா்காஸ் சாலை, ஸ்ரீ பால விநாயகா் நகா், கண்ணம்பாளையம், கோமதியம்மன் நகா், சென்றம்பாக்கம், சிரங்கவூா், புது நகா் 3 மற்றும் 5-ஆவது தெரு, மல்லிமாநகா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.