ராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்: ஜெய்சங்கர்
சென்னையில் 19 இடங்களில் மே 10-இல் குறைதீா் முகாம்
சென்னையில் 19 இடங்களில் நியாய விலைக் கடைகளின் சேவை தொடா்பாக மே 10-ஆம் தேதியன்று குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையா் அலுவலகங்களில், மே 10-ஆம் தேதியன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்களின் மூலம், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச் சான்று உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.