``அமெரிக்காவின் கூடுதல் வரி வேலைக்கு ஆகாது'' - இந்தியா, சீனாவுக்கு ஆதரவாக ரஷ்யா
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று(வெள்ளிக்கிழமை) காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு கருதி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் தொடர்பாக காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள மத்திய சுங்க தலைமை அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து அங்கும் சோதனை நடைபெற்று வருகிறது.
சமீபமாக பள்ளிகள், முக்கிய அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் என இந்தியா முழுவதுமே வெடிகுண்டு மிரட்டல் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் தில்லி உயர்நீதிமன்றம், மும்பை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
Bomb threat to the Chennai High Court
இதையும் படிக்க | நேனோ பனானா ஏஐ: இணையத்தைக் கலக்கும் புடவை, 3டி, ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்கள்!