``நான் சனிக்கிழமை மட்டுமே வெளியே வருபவன் அல்ல'' - விஜய்யைத் தாக்கிப் பேசிய உதயநி...
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை மற்றும் தமிழக டிஜிபி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில் புரளி எனத் தெரியவந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பதிவாளரின் அலுவலக மின்னஞ்சலுக்கு இன்று காலை மர்ம நபரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக நீதிமன்ற வளாகத்தில் இருந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பணியாளர்கள் மற்றும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து, நீதிமன்ற வளாகம், அரங்குகள், நீதிபதிகள் குடியிருப்புகளின் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஒரு மணிநேரம் நடத்திய சோதனையில் புரளி எனத் தெரியவந்தது.
இதேபோல், சென்னை காவல்துறை தலைவர் அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் மீட்கப்படவில்லை.
முன்னதாக, தமிழக ஆளுநர் மாளிகை, நடிகர் எஸ்.வி. சேகர் வீடு, வங்கிகளுக்கு வியாழக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.