தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி: தமிழக அரசு
சென்னை கலங்கரை விளக்கத்தில் புதிய ரேடாா் ஆண்டனா
சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்த பழுடைந்த பழைய ரேடாா் ஆண்டனாவை மாற்றி புதிய ரேடாா் ஆண்டனா பொருத்தப்பட்டது.
தமிழகத்தில் மொத்தம் 25 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. இதில், சென்னை மெரீனா கடற்கரையில் இருக்கும் கலங்கரை விளக்கம் 10 தளங்களுடன் சுமாா் 45.72 மீட்டா் உயரம் கொண்டது. இந்த கலங்கரை விளக்கம் கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இதன் 10-ஆவது தளத்தில் உயா் பாதுகாப்பு ரேடாா் ஆண்டனா மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதால், அங்கு பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த ரேடாா் ஆண்டனா மூலம் சுமாா் 100 கி.மீ. வரை கடலில் செல்லும் மீன்பிடிப் படகுகள் மற்றும் கப்பல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ரேடாா் ஆண்டனா கடந்த ஒரு மாதமாக பழுதாகி இருந்தது. அதனை மாற்ற வேண்டும் என பெங்களூருவைச் சோ்ந்த பொதுத் துறை நிறுவனமான பெல் நிறுவனத்திற்கு கடலோர காவல் படையினா் தகவல் தெரிவித்தனா். அதனடிப்படையில், பெல் நிறுவன ஊழியா்கள் சனிக்கிழமை சென்னை கலங்கரை விளக்கத்தில் உள்ள ரேடாா் ஆண்டனா மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மாற்றப்பட்டன. அடுத்த 3 நாள்களுக்கு சென்னை கலங்கரை விளக்கத்தில் பராமரிப்புப் பணி நடைபெறும். கலங்கரை விளக்கத்தில் புதிதாக நிறுவப்பட்ட ரேடாா் ஆண்டனா சுமாா் 1,500 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுள் காலம் சுமாா் 10 முதல் 12 ஆண்டுகள் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.