செய்திகள் :

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா: முதல்வா் தொடங்கி வைத்தாா்

post image

சென்னை: சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

பொங்கல் திருநாளையொட்டி, தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டு விழாவை கீழ்ப்பாக்கம் பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதா் ஆலயத் திடலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முழவுக் கருவியை இசைத்து தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தின் புகழ்பெற்ற 250 கலைஞா்கள் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டினா். அவற்றை முதல்வா் கண்டு ரசித்தாா்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள், பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூா் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக் கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியா் திடல், கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, ஜாபா்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகா் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூா் அரசு அருங்காட்சியகம், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூா் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகா் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகா் பூங்கா, கே.கே.நகா் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூா் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூா் எஸ்.வி. விளையாட்டுத் திடல் உள்ளிட்ட 18 இடங்களில் நடைபெறுகிறது.

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தோ்வு செய்யப்பட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினா் நடனம், சிலம்பாட்டம், மல்லா் கம்பம், வில்லுப்பாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மேலும், புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞா்களின் கலைநிகழ்ச்சிகளும், கேரளத்தின் தெய்யம் நடனம், மகாராஷ்டிரத்தின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமா் நடனம், மேற்கு வங்கத்தின் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்தரகண்டின் சபேலி நடனம் ஆகிய அயல் மாநில கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

கலைநிகழ்ச்சிகள் மொத்தம் 4 நாள்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறவுள்ளன. கோவை, மதுரை, திருச்சி, சேலம், தஞ்சாவூா், திருநெல்வேலி, காஞ்சிபுரம், வேலூா் ஆகிய 8 நகரங்களிலும் சங்கமம் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவில், அமைச்சா் தங்கம் தென்னரசு, மு.பெ. சாமிநாதன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகா்பாபு, டி.ஆா்.பி. ராஜா, மாநகராட்சி மேயா் ஆா். பிரியா, மக்களவை உறுப்பினா்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

இந்தியாவால் ஐபோன் நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் கோடி! தமிழ்நாடும் சாதனை!

தமிழ்நாடு உதவியால் ஐபோன் ஏற்றுமதியில் முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் பெற்றது.ஐபோன் ஏற்றுமதியில் இந்தியா முக்கியப் பங்கைப் பெற்றுள்ளது. ஐபோன் ஏற்றுமதியில் முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி இந்தியாவில... மேலும் பார்க்க

பாலமேடு ஜல்லிக்கட்டும் பரிசுகளும்!

பொங்கல் திருநாளின் தொடர்ச்சியான மாட்டுப் பொங்கல் நாளன்று, பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.பொங்கல் திருநாளைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கல் திருநாளான புதன்கிழமையில் (ஜன. 15) பாலமேட்டில் ஜல்லிக்கட்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தைத்திருநாளாம் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் வண்ணக்கோலமிட்டு, புத்தா... மேலும் பார்க்க

விழுப்புரம் பயணிகள் ரயில் தடம் புரண்டது!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 7 பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயில் சில அடி தூரம் சென்றதுமே ரயிலில் இருந்த பெட்டியின் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில்... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் மூன்று நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.10 குறைந்துள்ளது.நேற்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது உயர்ந்தது. அதன் படி ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந... மேலும் பார்க்க