செய்திகள் :

சென்னை சங்கமம் நிகழ்ச்சி: பேருந்து நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு!

post image

“சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சிகள்
சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு – சென்னை புறநகர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம்-கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், மாதவரம்-புறநகர் பேருந்து நிலையம்  ஆகிய இடங்களில் 5 மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுக்கு இணங்க  தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா'  நிகழ்ச்சி கலை பண்பாட்டுத்துறை சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, இந்தாண்டிற்கான சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை  முதல்வர் மு.க.ஸ்டாலின் 13.1.2025 அன்று சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா  நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில்  தொடங்கிவைத்தார்.

சென்னையில்  உள்ள 18   இடங்களில் 14.1.2025 முதல் 17.1.2025 வரை நான்கு நாள்கள் மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: வளர்ப்பு நாய்க்கு ரூ.5 லட்சம் செலவில் பிறந்தநாள் விழா! விடியோ வைரல்!

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உள்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக  வழங்கப்பட்டுள்ளது .

இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5,000/- ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திரு விழா’ கலை நிகழ்ச்சிகளை  பொதுமக்கள் அதிக அளவில் கண்டுகளிக்கும் வண்ணம் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மின்னணு வீடியோ வாகனங்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு – சென்னை புறநகர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் - கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் - புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் 13.1.2025 அன்று முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்த நிகழ்ச்சியையும், 14.1.2025 அன்றைய கலை நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் 15.1.2015 முதல் 17.1.2025 வரை மூன்று நாள்கள் நடைபெறும் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளை சென்னையில்மெரினா கடற்கரை, கோயம்பேடு – சென்னை புறநகர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் - கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் - புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மாலை  6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை  நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் 19 வயது இளைஞர் குத்திக்கொலை! 2 பேர் கைது!

புது தில்லியில் 19 வயது இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மங்கோல்புரி பகுதியைச் சேர்ந்த லக்கி (வயது 19), நேற்று (ஜன.22) மாலை உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட ... மேலும் பார்க்க

ஓடிடியில் புஷ்பா -2 எப்போது?

புஷ்பா - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா - 2 .இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ... மேலும் பார்க்க

தாய்லாந்தின் முதல் ஒலிம்பிக் நாயகனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தாய்லாந்து நாட்டின் முதல் ஒலிம்பிக் நாயகனுக்கு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.தாய்லாந்தைச் சேர்ந்த சோம்லக் கம்சிங் (வயது ... மேலும் பார்க்க

காபோன் நாட்டில் விரைவில் அதிபர் தேர்தல்! ராணுவ அரசு அறிவிப்பு!

மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனில் வருகின்ற 2025 ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டின் ராணுவ அரசு தெரிவித்துள்ளது.காபோன் நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு அதிபர் அலி போங்க... மேலும் பார்க்க

ஜன.25, 26-ல் சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

குடியரசு நாளையொட்டி சென்னையில் ஜன.25, 26 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை மெரீனாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு நாள் விழா... மேலும் பார்க்க

பனி விழும் மலர் வனம் தொடரிலிருந்து ரயான் விலகல்! இனி இவர்தான்!

பனி விழும் மலர் வனம் தொடரிலிருந்து பிக் பாஸ் பிரபலம் ரயான் விலகியுள்ளார். ஈரமான ரோஜாவே - 2 தொடரில் நாயகனாக நடித்த சித்தார்த் குமரனும் பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்த விணுஷா தேவியும் பிரதான பாத்... மேலும் பார்க்க