செய்திகள் :

China: `2 மாதத்தில் ரூ.22 லட்சம்..' -விமான வேலையை உதறிவிட்டு பன்றி வளர்ப்பில் இறங்கிய 27 வயது பெண்!

post image
சீனாவில் (China) 27 வயது இளம்பெண், தான் பார்த்து வந்த விமான பணிப்பெண் வேலையை உதறிவிட்டு பன்றி வளர்ப்பில் இறங்கி இரண்டு மாதங்களில் ரூ. 22.8 லட்சம் சம்பாதித்திருக்கிறார்.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) நாளிதழில் வெளியான செய்தியின்படி, ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் ஒரு கிராமவாசியான யாங் யான்சி என்ற இந்த இளம்பெண், உயர்கல்வி முடித்ததும் ஷாங்காயில் (Shanghai ) விமான பணிப்பெண்ணாக வேலையில் சேர்ந்தார். ஒருகட்டத்தில் அவரின் சம்பளமானது ரூ. 32,000-மாகக் குறையவே, ஷாங்காயில் தான் தங்கியிருந்த பகுதியில் ஆடம்பர பொருள்களை வாங்க யாங் அடிக்கடி தனது பெற்றோர்களிடம் நிதி உதவியை நாட வேண்டியிருந்தது.

விமானம்

பின்னர், தனக்காகத் தனது பெற்றோர்கள் தங்களின் செலவுகளைக் குறைத்துக் கொண்டதும், அதிகக் கடன் ஏற்பட்டதும் இவருக்குத் தெரியவந்தது. அதோடு, 2022-ல் தனது தாயின் மருத்துவ சிகிச்சை பற்றி அறிந்ததும், யாங் தனது வேலையை உதறித் தள்ளிவிட்டு வீடு திரும்ப முடிவு செய்தார். அதன்படி, ஐந்தாண்டு வேலையை உதறிய பிறகு 2023 ஏப்ரல் வாக்கில், தனது உறவினரின் பன்றிப் பண்ணையை எடுத்துக் கவனிக்க ஆரம்பித்தார்.

பண்ணையைப் பராமரிப்பது, பன்றிகளுக்குத் தீவனம் வைப்பது, அவற்றுக்கு அவ்வப்போது உடை அணிவிப்பது என தனது அனுபவங்களை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பிரபல வீடியோ தளத்தில் பதிவிட ஆரம்பித்தார். இணையத்தில் அந்த வீடியோக்கள் நல்ல வரவேற்பைப் பெறவே, அதன்மூலம், 1.2 மில்லியன் followers-களை அவர் பெற்றார். இத்தகைய சூழலில், ஜனவரி 6-ம் தேதி உறைந்த ஏரியில் யாங் மீன் பிடிக்கும்போது காலில் அடிபட்டது. தற்போது அவர் தனது பெற்றோருடன் ஒன்றாக மகிழ்வாக இருக்கிறார்.

பன்றி

இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பன்றி வளர்ப்பு, கால்நடைகள் விற்பனை மற்றும் சோசியல் மீடியா மூலம் ரூ. 22.8 லட்சத்துக்கு மேல் யாங் வருமானம் ஈட்டியிருக்கிறார். இதன்மூலம், யாங் அடுத்தகட்டமாகப் பண்ணையை விரிவுபடுத்தவும், எதிர்காலத்தில் ஒரு ஹோட்டலை நிறுவவும் திட்டமிட்டிருக்கிறார்.

success story

தன்னுடைய இத்தகைய வளர்ச்சி குறித்து பேசியிருக்கும் யாங், ``எனது பெற்றோர் எப்போதும் எனக்கு நல்லவற்றையே சொன்னார்கள். ஒருகட்டத்தில், எனது பெற்றோரை விட்டுத் தொலைவில் இல்லாமல், அவர்களுக்கு அருகில் இருக்க விரும்பினேன். இப்போது, பன்றிப் பண்ணையில் கடுமையாக உழைக்கிறேன். ஒவ்வொரு நாளும் முதுகு, இடுப்பில் வலி இருக்கும். உடல் மேல் துர்நாற்றம் வீசும். இருந்தாலும், என் பெற்றோருடன் என்னால் இருக்க முடியும். இப்போது நான் மகிழ்வாகவும் நிறைவாகவும் இருக்கிறேன்." என்றார். யாங்கின் இந்த வளர்ச்சி சீன சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

``5 உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்'' -உறுப்புகள் தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது: 66). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி சோமவள்ளி என்கின்ற பாப்பாத்தி (வயது: 49). கடந்த வாரம் சோமவள... மேலும் பார்க்க

வேலூர்: மூளைச்சாவடைந்த இளைஞர்... இறந்தும் 6 பேருக்கு மறு வாழ்வு - நெகிழும் உறவினர்கள்!

பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக் வேலை செய்து வந்தார் அருள் (வயது 24). இவர் பொங்கல் பண்டிகை கொண்டாட கடந்த 14-ம் தனது சொந்த ஊரான வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மகமதுபுரம் கிராமத்திற... மேலும் பார்க்க

கடலூர்: ஓய்வு பெற்ற ஆசிரியையின் கண்கள் தானம்; 4 பேருக்கு பார்வை கிடைத்தது!

கடலூர் மாவட்டம், குண்டு உப்பலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதாம்பாள். ஓய்வு பெற்ற தலைமையாசிரியையான இவர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். அதையடுத்து அவரின் மகன்களான செல்வகுமாரும்,... மேலும் பார்க்க

`இன்னும் இன்னும் நல்லா இரு தங்கம்'- தமிழ்நாடே பதறிப்போன விபத்து; தன்யஸ்ரீ எப்படியிருக்கிறாள்?

தண்டையார்பேட்டையில் 2018-ம் வருடம் ஜனவரி மாதம் நடந்த அந்த சம்பவம் ஒருவருடைய குடிப்பழக்கம் அவருக்கு சம்பந்தமே இல்லாத ஒரு குழந்தையின் வாழ்க்கையில் எத்தகைய பயங்கரத்தை ஏற்படுத்தும் என்று மொத்த தமிழ்நாட்டு... மேலும் பார்க்க

டெலிவரி பாய் டு நீதிபதி... படிப்பால் உயர்ந்த கேரள இளைஞரின் வெற்றிக்கதை!

"நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்ற பாரதியாரின் வரிதான் யாசின் ஷா முகமது பல தடைகளையும் பின்னடைவுகளையும் கடந்து வெற்றி பெறுவதற்கான நெருப்பை அவருள் நிலைத்திருக்கச் செய்துள்ளது. சாதாரண டெலிவரி பாயாக பண... மேலும் பார்க்க