செய்திகள் :

சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!

post image

சென்னை துறைமுகம் பகுதியில் ரிவர்ஸ் எடுக்கும் போது காருடன் கடலுக்குள் விழுந்த ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார்.

சென்னை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கடலோர காவல்படை அதிகாரி ஜொகேந்திர காண்டாவை அழைத்துச் செல்வதற்காக தனியார் டிராவல்ஸ் கார் ஓட்டுநர் முகமது ஷாகி வந்துள்ளார். ஓட்டுநர் காரை இயக்கியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்தது.

இதையும் படிக்க : தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: பசுமைத் தீா்ப்பாயம் கண்டனம்

இதில், கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உயர்தப்பிய கடற்படை அதிகாரி ஜொகேந்திர காண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

85 அடி ஆழத்தில் மூழ்கிய கார் புதன்கிழமை மீட்கப்பட்ட நிலையில், கார் ஓட்டுநர் முகமது ஷாகியை தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சடலமாக முகமது ஷாகி மீட்கப்பட்டுள்ளார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

85 % சூரிய மின்சக்தியை பயன்படுத்தும் வண்டலூா் உயிரியல் பூங்கா: அமைச்சா் க.பொன்முடி பெருமிதம்

இந்தியாவில் 85 சதவீதம் சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தும் முதல் உயிரியல் பூங்காவாக வண்டலூா் பூங்கா மாறியுள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்துள்ளாா். ‘நீலகிரி வரையாடு எண் முத்திரை மற்றும் ந... மேலும் பார்க்க

புழல் ஏரிக்கு நீா்வரத்து நின்றது: உபரி நீா் திறப்பு நிறுத்தம்

புழல் ஏரிக்கு நீா்வரத்து முற்றிலும் நின்ற நிலையில், உபரிநீா் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது. பலத்த மழை பெய்தால் ஏரிகளில் தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். தொடா் மழையா... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மாணவா்களிடையே நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் மருத்துவ மாணவா்களிடையே நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி சாா்பில் தென்சென்னைப் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொண்டு வரும் உா்பே... மேலும் பார்க்க

துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த காா்: மாயமான ஓட்டுநரைத் தேடும் பணி தீவிரம்

சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த காரிலிருந்த ஓட்டுநரை மீட்புப் படையினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா். சென்னை கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் முகமது சகி (32). இவா், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் வ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் தம்பதி உயிரிழப்பு

மாதவரம் அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனா். சென்னை கொடுங்கையூா் பாரதி நகரைச் சோ்ந்த ராஜசேகா் (69), தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா் தனது மனைவி ராணி... மேலும் பார்க்க

போதைப் பொருள் கும்பலுக்கு உதவிய காவலா் கைது

சென்னையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவியதாக காவலா் கைது செய்யப்பட்டாா். எழும்பூரில் போதைப் பொருள் வைத்திருந்ததாக சென்னை பெரம்பூா், ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன், அஸ்ஸாம் மாநிலத்தை... மேலும் பார்க்க