செய்திகள் :

சென்னை, புறநகரில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

post image

சென்னை, புறநகரில் இரவில் கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.

மழை நிலவரம் தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

காலையில் வெய்யில் சுட்டெரித்தாலும், சென்னை, அதன் புறநகரில் மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. தற்போது, சென்னை நகரில் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், இரவில் சென்னை, அதன் புறநகரில் பலத்த மழை பெய்யும்.

தமிழகத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள் அடுத்த சுற்று மழைக்கு தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: காஸா மக்களை வெளியேற்ற இஸ்ரேல் தீவிரம்! மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள்!!

Private meteorologist Pradeep John has said that Chennai and its suburbs will receive heavy rains overnight.

அரசு மருத்துவமனையில் 27 கா்ப்பிணிகள் மயக்கம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சீா்காழி அரசு மருத்துவமனையில் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் செலுத்திக் கொண்ட 27 போ் மயக்கமடைந்தது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவ... மேலும் பார்க்க

1.5 கோடி ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கும்: மின்வாரியம் தகவல்

தமிழகத்தில் 1.5 கோடி ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 3 கோடிக்கு அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு டிஜிட்டல் ... மேலும் பார்க்க

பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள்: தமிழக அரசு உத்தரவு

பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து துறையின் செய... மேலும் பார்க்க

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 46.மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.சென்னையில் க... மேலும் பார்க்க

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

முதல்வராக்கி சிறைக்குச் சென்ற சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமிக்கு அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் சவால் விடுத்துள்ளார். அம்மா ... மேலும் பார்க்க

என்னைப் பார்க்கவே தயங்குவார் பழனிசாமி; அவரை முதல்வராக்கியது நாங்கள்! - டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே நாங்கள்தான் என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த... மேலும் பார்க்க