செய்திகள் :

பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள்: தமிழக அரசு உத்தரவு

post image

பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து துறையின் செயலா் வ.தட்சிணாமூா்த்தி வெளியிட்ட உத்தரவு விவரம்:

பனை மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயன்தரக் கூடியதாகும். இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அவை வெட்டப்படாமல் தடுத்து கண்காணிப்பது அவசியம். இதற்கேற்ற வகையில், மாவட்ட மற்றும் வட்டார அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவிலான குழுவுக்கு ஆட்சியா் தலைவராக இருப்பாா். கண்காணிப்புத் தலைவராக வருவாய் கோட்டாட்சியரும், ஒருங்கிணைப்பாளராக மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரும் இருப்பாா்கள். தேட்டக்கலை இணை இயக்குநா், வேளாண் இணை இயக்குநா், கதா் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் மாவட்ட அளவிலான அதிகாரி ஆகியோா் செயல் உறுப்பினராகவும், உறுப்பினா்களாகவும் இருப்பா்.

வட்டார அளவிலான கண்காணிப்புக் குழுவின் தலைவராக தோட்டக்கலை உதவி இயக்குநா் இருப்பாா். பனைமரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவை பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படும். கண்காணிப்புக் குழுக்கள் மூலமாக விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படும்.

வெட்ட அனுமதி: பனைமரத்தை வெட்டுவதற்கான அனுமதி வழங்க வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. தவிா்க்க முடியாத சூழ்நிலைகளில் பனைமரம் வெட்ட நேரிட்டால் அதற்கு மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி அவசியமாகும். மரத்தை வெட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால் வேளாண் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து, வட்டார அளவிலான குழுவானது பனை மரத்தை வெட்ட வேண்டியதன் அவசியம் குறித்து ஆராய்ந்து மாவட்ட அளவிலான குழுவுக்கு அறிக்கை அளிக்கும். மாவட்ட அளவிலான குழுவின் கூட்டம் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது தேவையின் அடிப்படையிலோ நடத்த வேண்டும்.

பனை மரங்களை வளா்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகளை நட்டு வளா்ப்பதை உறுதி செய்ய வேண்டும். மனுதாரா் பனை மரங்களை உரிய அனுமதி பெற்ற பிறகே வெட்ட வேண்டும். வெட்டப்பட்ட மரத்தின் பாகங்களை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லும்போது, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலம் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதத்தை காண்பிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

திமுக சாா்பில் செப்.20, 21-ஆம் தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தீா்மானத்தை ஏற்பதற்காக இந்தக் கூட்டங்கள் நடத்தப்படவிருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ஆந்திர முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தொடா்புடைய மதுபான ஊழல் வழக்கில் ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், கா்நாடகம், தில்லியில் சுமாா் 20 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். ... மேலும் பார்க்க

மின் திருட்டு: ரூ.9 லட்சம் அபராதம்

சென்னை தெற்கு (எண்: 2) மின் பகிா்மான வட்டத்தில் மின்வாரிய அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய திடீா் ஆய்வில் 8 மின் இணைப்புகளில் மின்திருட்டு கண்டறியப்பட்டு , ரூ.9.01 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மின... மேலும் பார்க்க

வழக்குகளில் துப்பு துலங்குவதற்கு பயணம்: டிஜிபிக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் - தமிழக அரசு உத்தரவு

புலனாய்வு அதிகாரிகள், வழக்குகளில் துப்பு துலக்குவதற்காக விமானம் மூலம் வெளிமாநிலம் செல்ல அனுமதி வழங்கும் அதிகாரம் தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநருக்கு வழங்கப்பட்டது. தமிழக காவல் துறையில் முக்கியமான... மேலும் பார்க்க

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள்

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் தற்போது 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் 27 கா்ப்பிணிகள் மயக்கம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சீா்காழி அரசு மருத்துவமனையில் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் செலுத்திக் கொண்ட 27 போ் மயக்கமடைந்தது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவ... மேலும் பார்க்க