பழனி: பழங்குடி மக்களின் துயரத்தை எடுத்துரைத்த ஜூ.வி... வீடு கட்டும் ஆணை பிறப்பித...
நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!
நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 46.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
சென்னையில் கௌதம் வாசுதேவ் மேனன் - தர்ஷனின் காட்ஜில்லா படப்பிடிப்பில் இருந்தபோது நீர்ச்சத்து குறைபாடு, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் மயக்கமடைந்தார்.
உடனே அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி உயிரிழந்தார்.