பழனி: பழங்குடி மக்களின் துயரத்தை எடுத்துரைத்த ஜூ.வி... வீடு கட்டும் ஆணை பிறப்பித...
Robo Shankar: உடல்நலக் குறைவால் காலமானார் ரோபோ சங்கர்
நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இயற்கை எய்தியிருக்கிறார். அவருக்கு வயது 46

உடல்நலக் குறைவால் நேற்று காலை சென்னையில் உள்ள பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பிரபலமானவர், அடுத்தடுத்து கிடைத்த சினிமா வாய்ப்புகளை இறுக்கமாகப் பிடித்து, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க காமெடியன்களில் ஒருவரானார்.
இவர் செய்யும் மிமிக்ரிக்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு, பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி' திரைப்படம் ப்ரேக் தந்தது பெரிய வாய்ப்புகளை தேடி தந்தது.

அப்படத்தைத் தொடர்ந்து உச்ச நட்சத்திரங்கள் பலருடைய திரைப்படங்களில் நடித்தார் ரோபோ சங்கர். டப்பிங் ஆர்ட்டிஸ்டாக லயன் கிங்' இவர் கொடுத்த பின்னணி குரலும் பல குழந்தைகளுக்கு பிடித்தமானது.
சன் டி.வி-யில் ஒளிபரப்பாகி வந்த டாப் குக் டூப் குக்' நிகழ்ச்சியிலும் போட்டியாளராக இவர் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023-ம் ஆண்டு இவருக்கு மஞ்சக்காமாலை நோய் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இவருடைய உடல் எடை பெருமளவு குறைந்ததும் பலருக்கு நினைவிருக்கலாம்.
ரோபோ சங்கரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...