செய்திகள் :

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

post image

நேபாளத்தில், பதவி விலகிய முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராணுவ முகாமில் இருந்து வெளியேறி தனியார் வீட்டில் குடியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள நாட்டில், சமூக ஊடகங்கள் மீதான தடை மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றை எதிர்த்து ஜென் - ஸி என்றழைக்கப்படும் இளம் தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் மற்றும் அரசுப் படைகளுக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்ததும், கடந்த செப்.9 ஆம் தேதி அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, நேபாள அரசு கவிழ்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இளைஞர்கள் மற்றும் ஆர்வலர்களின் ஆதரவுடன் நேபாளத்தின் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, செப்.12 ஆம் தேதி இடைக்கால பிரதமராகப் பதவியேற்றார்.

நேபாளத்தின் வன்முறையின்போது பக்தாப்பூர் மாவட்டத்தில் இருந்த முன்னாள் பிரதமர் சர்மா ஓலியின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இதையடுத்து, நேபாள ராணுவத்தின் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலமாக அவர் அங்கிருந்து தப்பி ஷிவாப்புரி வனப்பகுதியில் உள்ள ராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டார்.

மேலும், சர்மா ஓலி உள்பட முன்னாள் பிரதமர்களும், மூத்த அரசியல் தலைவர்களும் ராணுவத்தின் பாதுகாப்பில் அவர்களது முகாமில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், சுமார் 9 நாள்கள் கழித்து முன்னாள் பிரதமர் சர்மா ஓலி ராணுவ முகாமில் இருந்து வெளியேறி பக்தாப்பூரின் குண்டூ பகுதியில் உள்ள தனியார் வீட்டிற்கு குடியேறியுள்ளார். இத்துடன், அவர் அங்கு வசிப்பதால் அந்த வீட்டுக்கு மக்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:அமெரிக்காவில் போதைப்பொருள் விவகாரம்! தொடர்புடைய இந்தியர்கள் விசாவுக்கு தடை!

In Nepal, former Prime Minister K.P. Sharma Oli has reportedly moved out of the army camp and settled in a private house.

உள்நாட்டில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்! 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி!

பாகிஸ்தானின், பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.பலூசிஸ்தானின், குஸ்தார் மாவட்டத்தின் ஸெஹ்ரி பகுதியில் குடியிருப்பு வீடுகளைக்... மேலும் பார்க்க

பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறினாரா அதிபர் டிரம்ப்?

பிரிட்டன் நாட்டுக்கு, அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறியதாக, இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்... மேலும் பார்க்க

பாலிவுட்டில் நடிக்க ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி சம்பளமா?

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை சிட்னி ஸ்வீனியை, தற்போது பாலிவுட்டிலும் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.2009-ல் ஹாலிவுட்டில் ஹீரோஸ் என்ற தொலைக்காட்சித் தொட... மேலும் பார்க்க

ஆப்கனில் இணைய சேவையைத் துண்டித்த தலிபான் அரசு!

ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு, தலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், ஒழுக்கக் கேட்டைத் தவிர்க்கும் முயற்சி எனக் கூறி, ஃபைபர் ஆப்டிக்... மேலும் பார்க்க

காஸா மக்களை வெளியேற்ற இஸ்ரேல் தீவிரம்! மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள்!!

வடக்கு காஸாவில் உள்ள மக்களை வெளியேற்ற இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர்... மேலும் பார்க்க

சிந்தூர்: பயங்கரவாதிகள் இறுதிச் சடங்கில் அதிகாரிகள் பங்கேற்க உத்தரவிட்டது பாக். ராணுவ தளபதி

இந்தியா நடத்திய சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதே பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர்தான் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது தலைவர் இலியாஸ் கஷ்ம... மேலும் பார்க்க