மதுரை: சமையல் சூப்பர் ஸ்டார் கோலாகலம்; மூன்று இடங்களை பிடித்த நளன் பேத்திகள்!
சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி!
சென்னையில் நாளை முதல் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை முதல் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்தது. குறிப்பாக திருவண்ணாமலை, விருதுநகர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில்,தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (16-12-2024) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக டிசம்பர் 17 (நாளை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 18 (நாளை மறுநாள்) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையாகக் கையில் குடை, மழை கவசம்(ரெயின் கோர்ட்) கொண்டு செல்லவும்.