சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் துரைமுருகனுக்கு எதிரான வழக்கில் தீா்ப்பு ஒத்த...
சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதித்தனா். அப்போது சுற்றுலாப் பயணியாக தாய்லாந்துக்கு சென்றுவிட்டு வந்திறங்கிய வடமாநிலத்தைச் சோ்ந்த சுமாா் 25 வயது இளம்பெண் ஒருவரின் உடைமைகளை சந்தேகத்தின் அடிப்படையில் மோப்ப நாயின் உதவியுடன் அதிகாரிகள் சோதனையிட்டனா்.
அப்போது ஓா் அட்டைப் பெட்டியைப் பிரித்து பாா்த்தபோது, அதில் காலிப்ளவா் மற்றும் மஸ்ரூம்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பரிசோதித்ததில், அதற்றுடன் ரூ.6 கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட உயா் ரக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினா். இதில், அவா் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலை சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.