செய்திகள் :

செபி அமைப்பின் புதிய தலைவர் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்தின் (செபி) தலைவராக உள்ள மாதவி புரி புச் பதவிக்காலம் நிறைவடையவிருக்கும் நிலையில் புதிய தலைவர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய நிதித்துறை அறிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு செபி தலைவராக பதவியேற்ற மாதவி புரி புச் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான நிலையில், அவரது மூன்று ஆண்டுகள் பதவிக் காலம் பிப். 28-ல் நிறைவடைகிறது.

இதையடுத்து, இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்கு முறை வாரியத்தலைவர் பதவிக்கு தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து பூர்த்திசெய்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செபி தலைவராக பதவியேற்பவரின் பதவிக் காலம் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் அல்லது அவர் 65 வயதை நிறைவு செய்வது என இதில் எது முதலில் வருமோ அதுவரை பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செபி தலைவராக நியமிக்கப்படுபவர், மத்திய அரசின் செயலர் பதவியில் இருப்பவர்களுக்கு இணையான ஊதியம் அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட மாத ஊதியமாக ரூ.5,62,500 மட்டும், வீடு, வாகனம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் வழங்கப்படுவது என ஒன்றை தெரிவு செய்துகொள்ளலாம் என பொருளாதார விவகாரத் துறை வெளியிட்டிருக்கும் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பங்குச் சந்தைகளை ஒழுங்குமுறைபடுத்தும் அமைப்பாக செயல்பட்டு வரும் செபி அமைப்பு, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது. தற்போது தலைவராக இருக்கும் மாதவி புரி புச் மற்றும் அவரது கணவர் மீது ஏராளமான முறைகேட்டுப் புகார்கள் எழுந்தன.

மாதவி புரி புச், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் செபி அமைப்பின் முழு நேர உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் செபி தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது பதவி பிப். 28ஆம் தேதி நிறைவடையவிருப்பதால், 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 61,000-ஐ நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 61,000-ஐ நெருங்கியுள்ளது.ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 22 ஆம் தேதி ரூ.60,000-ஐ கடந்து வரலாற்று உச்சம் அடைந்தது. அதன்பிறகு சிறிது ஏற்றம், இறக்கம் இருந்தால... மேலும் பார்க்க

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 22 சதவிகிதம் சரிவு!

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 22 சதவிகிதம் சரிவடைந்து ரூ.5,578 கோடி ஆக சரிந்துள்ளது.இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் பங்குச் சந்தையி... மேலும் பார்க்க

ஜென் 3 மாடலை அறிமுகப்படுத்தும் ஓலா நிறுவனம்!

புதுதில்லி: எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் ஓலா நிறுவத்தின் தயாரிப்புகளை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில், ஓலா நிறுவனரான பவிஷ் அகர்வால் இன்று... மேலும் பார்க்க

10 கிராமுக்கு ரூ.83,750 என்ற புதிய உச்சத்தை தொட்ட தங்கம்!

புதுதில்லி: நகை வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து அதிகப்படியான கொள்முதல் காரணமாக புதுதில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.910 உயர்ந்து ரூ.83,750 ஐ எட்டியது என்று அகில இ... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.86.56 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 1 காசு உயர்ந்து ரூ.86.56 ரூபாயாக முடிவடைந்தது.ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கூட்ட முடிவில் வட்டி விகிதக் குறைப்பு இருக்காது என்ற எதிர்பார்ப்பி... மேலும் பார்க்க

உறுதியான குறியீடுகளால் சென்செக்ஸ், நிஃப்டி கிட்டத்தட்ட 1% உயர்வுடன் முடிவு!

மும்பை: சர்வதேச சந்தைகளின் உறுதியான போக்குக்கு மத்தியில் ஐடி, மூலதன பொருட்கள் மற்றும் தொழில்துறை பங்குகள் உயர்வால் உற்சாகமடைந்த பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று... மேலும் பார்க்க