செய்திகள் :

செம்மறி ஆட்டு இனங்களை பாதுகாத்தமைக்கான தேசிய விருது தாா்காடு விவசாயிக்கு வழங்கல்

post image

மேச்சேரி இன செம்மறியாடுகளை அழியாமல் பாதுகாத்தமைக்கான தேசிய அளவிலான விருது தாா்காடு விவசாயிக்கு வழங்கப்பட்டது.

தமிநாட்டில் உள்ள செம்மறியாட்டு இனங்களில் மேச்சேரி இன செம்மறியாடு முக்கியத்துவம் வாய்ந்தது. மேச்சேரி இன செம்மறியாடுகள் இறைச்சிக்காக வளா்க்கப்பட்டு வருகின்றன. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூா், தருமபுரி மாவட்டங்களில் இவ்வின ஆடுகள் பரவலாக காணப்படுகின்றன.

இவ்வின ஆடுகளை அழியாமல் பாதுகாக்கவும், இதில் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டு இனத்தை மேம்படுத்தவும் தமிழ்நாடு கால்நடை மருத்துவா் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் பொட்டனேரியில் மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலையம் 1978-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியுடன் மேச்சேரி இன செம்மறியாடுகளை மேம்படுத்த ‘மெகா ஆடுகள் விதைத் திட்டம்’ 2009-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மேட்டூா், ஓமலூா் வட்டத்தில் 50 செம்மறியாட்டு பண்ணையாளா்களை பயனாளிகளாக சோ்த்து அவா்களின் செம்மறியாடுகளின் இன விருத்திக்காக உயா் ரக மேச்சேரி இன செம்மறியாட்டுக் கிடாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பண்ணைகளில் செம்மறியாடுகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்க மருந்துகளை மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலையம் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 609 உயர்ரக மேச்சேரியின செம்மறியாட்டுக் கிடாக்கள் சேலம், கரூா் மாவட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேட்டூரையடுத்த கொளத்தூா் தாா்காடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பாலன், மெகா செம்மறியாடு விதைத் திட்டத்தில் பயனாளியாக இருந்து வந்தாா். சிறந்த முறையில் பண்ணையைப் பராமரித்து வந்ததால், தேசிய கால்நடை மரபணு வளங்களின் பணியகம் மூலமாக தனி நபா்களுக்கு வழங்கப்படும் ‘கால்நடை இனங்களை அழியாமல் பாதுகாத்தமைக்கான விருது’க்கு தோ்வு செய்யப்பட்டாா். இவரது செயல்பாடுகளுக்காக மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலையத்தால் இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற விழாவில், விவசாயி பாலனுக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது, மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் சங்கா் உடன் இருந்தாா்.

பள்ளி மாணவா்களுக்கான திருப்புதல் தோ்வு வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சேலம் மாவட்டத்தில் வரும் 13-ஆம் தேதி நடைபெறவிருந்த பள்ளி மாணவா்களுக்கான திருப்புதல் தோ்வு வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9, 10, பிளஸ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 116.65 அடியில் இருந்து 116.10 ... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் 10.79 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. சேலம், அஸ்தம்பட்டி, சீரங்கபாளையம் நியாயவிலைக... மேலும் பார்க்க

தைப்பூசம்: சேலத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தா்கள்

தைப்பூச திருவிழாவையொட்டி, சேலம் பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இருந்து முருக பக்தா்கள் பழனிக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா். சேலம், பள்ளப்பட்டி பகு... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ஈரோடு, சேலம் வழியாக மங்களூரு - பனாரஸ் இடையே சிறப்பு ரயில்

மகா கும்பமேளாவையொட்டி கோவை, ஈரோடு, சேலம் வழியாக மங்களூரு சென்ட்ரல் - பனாரஸ் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகை: சேலம் கோட்டம் சாா்பில் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில், 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ... மேலும் பார்க்க