செய்திகள் :

செல்வாக்கு உயரும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!

post image

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஏப்ரல் 04 - 10) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

செல்வாக்கு உயரும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பொறுப்பை உணர்வீர்கள். இடையூறுகளைச் சமாளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டு சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு அரசு விஷயங்களில் இழுபறியான சூழ்நிலைகள் மறையும்.

அரசியல்வாதிகளுக்கு பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கலைத் துறையினர் ஆதரவான சூழ்நிலைகளைப் பெறுவீர்கள். பெண்கள் மனதுக்கு விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

கடமையை உணர்வீர்கள். பணவரவும் சற்று கூடும். உடனிருப்போரின் உதவிகள் கிடைக்கும். கோயில் திருப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் திட நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். விவசாயிகளுக்கு சக விவசாயிகளுடன் ஒற்றுமை கூடும்.

அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்புகள் ஆக்கம் தரும். கலைத் துறையினருக்கு கலைநிகழ்ச்சிகள் ஒப்பந்தமாகும். பெண்கள் கணவர் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் பெற்றோரை அனுசரித்து நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

வருமானம் பலவகைகளில் கிடைக்கும். ரகசியங்களை வெளியிட மாட்டீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டு. பெற்றோர் ஆதரவை நல்குவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலைமை உண்டாகும். விவசாயிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். விவசாயிகள் அதிகச் செலவுகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். கலைத் துறையினரின் வாய்ப்புகள் தள்ளிப் போகும். பெண்கள் ஆன்மிகத்தில் நாட்டம் கொள்வீர்கள். மாணவர்கள் ஒருமித்த மனதுடன் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உடல் நலத்தில் சிறு பாதிப்பு உண்டாகும். உங்கள் நலனில் பெற்றோர் அக்கறை காட்டுவார்கள். குழந்தைகள் பேச்சை கேட்டு நடப்பார்கள். வங்கிக் கடன்கள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் காரியங்களைத் துரிதமாக முடிப்பீர்கள். வியாபாரிகளின் கொடுக்கல் - வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். விவசாயிகள் நிலுவைத் தொகையை அடைத்துவிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினர் வளர்ச்சியைப் பெறுவீர்கள். பெண்கள் குடும்ப ஒற்றுமையைக் காண்பீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். கூடுதல் வருவாய் பெறுவீர்கள். கோயில் பணிகளுக்குச் செலவழிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உடன்பணிபுரிவோர் உதவுவார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை நம்பி பணிகளை ஒப்படைப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பொறுமை அவசியம். கலைத் துறையினருக்கு பாராட்டுகள் கிடைக்கும். பெண்களுக்கு கணவருடன் அந்நியோன்யம் அதிகரிக்கும். மாணவர்கள் விரும்பிய பாடப் பிரிவுகளில் சேர்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு உண்டு. வியாபாரிகள் நிதானமாக நடப்பீர்கள். விவசாயிகள் ஊடுபயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தை அனுசரித்து நடப்பீர்கள். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும். பெண்கள் சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவை உண்பீர்கள். மாணவர்கள் யோகா, ப்ராணாயாமம் கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள் புகழ் உயரும். சுதந்திரமாகப் பயணிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மிகுந்த மதிப்புடன் வலம் வருவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். விவசாயிகள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் சோர்வடையாமல் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு ஆதரவு அதிகரிக்கும். பெண்கள் ஆன்மிகம், தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மாணவர்களின் கோரிக்கைகளை பெற்றோர் நிறைவேற்றுவார்கள்.

சந்திராஷ்டமம்}இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

நெடுநாளைய உடல்உபாதை நீங்கும். விரோதம் பாராட்டியவர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். தொழிலை மேம்படுத்துவீர்கள். உடன்பிறந்தோரின் விருப்பத்தை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உயரும். வியாபாரிகளுக்கு வாராக் கடன் வசூலாகும். விவசாயிகளின் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடிவரும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் பெற்றோர் வழியில் பெருமைகள் கூடும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஏப்ரல் 4, 5.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரியங்கள் நடந்தேறும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உயர்ந்தோரைச் சந்திப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணிநிமித்தமான சிந்தனைகள் மேம்படும். வியாபாரிகள் சிறிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் விவசாயப் பணிகளை செம்மையாகச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். கலைத் துறையினருக்கு சக கலைஞர்களின் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் குறைகள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஏப்ரல் 6,7.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியத்தைப் பேணி காப்பீர்கள். சுயமரியாதையை இழக்காமல் செயலாற்றுவீர்கள். எவருக்கும் ஜாமீன் போடக் கூடாது. சண்டை ஏற்படாமல் கவனமாக இருக்கவும்.

உத்தியோகஸ்தர்கள் கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வியாபாரிகள் சிந்தித்துச் செயல்படுவீர்கள். விவசாயிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளின் சிந்தனைகள் அதிகரிக்கும். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்கள் ஆன்மிக பலத்தை அதிகரித்துக்கொள்வீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஏப்ரல் 8, 9, 10.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குழப்பங்கள், பதற்றங்களில் இருந்து விடுபடுவீர்கள். செயல்களை முடிப்பீர்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் மௌனமாக இருக்கவும். சிக்கனமாக இருந்து விரயங்களைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உதவிகள், மாற்றங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். விவசாயிகள் புத்துணர்வுடன் சேவையில் ஈடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும். பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கூடும். மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். நண்பர்கள் முழு ஆதரவை அளிப்பார்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் பயிர்களைப் பாதுகாப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். கலைத் துறையினர் பிறர்எண்ணங்களை அறிவீர்கள். பெண்களுக்கு அமைதியான சூழல் நிலவும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிபி சத்யராஜுக்கு திருப்புமுனையா, டென் ஹவர்ஸ்? - திரை விமர்சனம்!

நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவான டென் ஹவர்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.காவல்துறை ஆய்வாளரான கேஸ்ட்ரோ (சிபி சத்யராஜ்) வழக்குகளை ‘விசாரிக்க வேண்டிய விதத்தில்’ விசாரிப்பவர். அவ... மேலும் பார்க்க

இன்றைய நாள் யாருக்கு சாதகம்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.ஏப்ரல் 18 (வெள்ளிக்கிழமை)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சந்த... மேலும் பார்க்க

எம்புரான் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

எம்புரான் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்த எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சன... மேலும் பார்க்க

சச்சின் திரைப்படம் நாளை மறுவெளியீடு!

விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் நாளை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கி 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். ஜெனிலியா, வடிவே... மேலும் பார்க்க

சூரியின் அடுத்த பட அறிவிப்பு!

நடிகர் சூரி நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுதலை படத்திற்குப் பிறகு முழுநேர கதாநாயகனாக மாறிவிட்டார் நடிகர் சூரி. அதன் பின்னர் வெளியான கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 ஆகிய படங... மேலும் பார்க்க