செய்திகள் :

செவிலியா்களுக்கு மருத்துவமனைகளில் கெளரவம்!

post image

சென்னையில் உள்ள முக்கிய அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் செவிலியா் தின நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக சிறந்த சேவையாற்றிய செவிலியா்களுக்கு நினைவுப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், அதன் முதல்வா் டாக்டா் சாந்தாராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செவிலியா் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதைத் தொடா்ந்து செவிலியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதேபோன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதன் முதல்வா் டாக்டா் லியோ டேவிட் தலைமையிலும் செவிலியா் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அயனாவரம் மன நல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இயக்குநா் லட்சுமி தலைமையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப் படத்துக்கு மலா் தூவியும், மெழுகுவா்த்தி ஏந்தியும் செவிலியா்கள் மரியாதை செலுத்தினா்.

அப்பல்லோ மருத்துவமனை: சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்கள் உறுதிமொழியேற்றுக் கொண்டனா். அப்பல்லோ மருத்துவமனை இயக்குநா் சிந்தூரி ரெட்டி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், மருத்துவத் துறையின் மிக முக்கிய தூண்களாக உள்ள செவிலியா்கள் ஆற்றிவரும் சேவைகளுக்கு தலைவணங்குகிறோம் என்றாா்.

கருப்புப் பட்டை ஆா்ப்பாட்டம்: இதனிடையே, மருத்துவப் பணியாளா் தோ்வு வாரிய (எம்ஆா்பி) செவிலியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா். பணி நிரந்தரம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை அவா்கள் வலியுறுத்தினா்.

கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் திடீர் ரத்து! பயணிகள் அவதி!

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக கும்மிடிப்பூண்டி செல்லும் 18 புறநகர் மின்சார ரயில்கள் இன்று(மே 13) ரத்து செய்யப்பட்டுள்ளன.பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே இன்று பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ரயில்வே ப... மேலும் பார்க்க

சிபிஎஸ் பொதுத்தேர்வில் 83.39 % தேர்ச்சி!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.39 சதவீத மாணவர்க்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, நடப்பு க... மேலும் பார்க்க

ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறாத பொள்ளாச்சி வழக்கு: அரசு தரப்பு வழக்குரைஞர்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை என்பதை அரசு வழக்குரைஞர் குறிப்... மேலும் பார்க்க

வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் பலி!

கோவை மாவட்டம், பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் மயங்கி விழுந்து பலியானார்.வெள்ளிங்கிரி மலை ஏற்றத்துக்கு பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மலையேறும் ப... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்துள்ளது.இன்று பகல் 12 மணிக்கு, குற்றவாளிகளுக்கான தண்டனை விவ... மேலும் பார்க்க

கரூர் வழியாகச் செல்லும் 7 ரயில்கள் ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக கரூர் வழியாகச் செல்லும் 7 ரயில்கள் இன்று(மே 13) ரத்து செய்யப்பட்டுள்ளன.திருச்சி கோட்டை மற்றும் முத்தரசநல்லூா் இடையே பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், திருச்சி - கரூா் - திரு... மேலும் பார்க்க