ஆளுநர் ஆர்.என். ரவி சுயமாக முடிவெடுத்துள்ளார்! - உச்சநீதிமன்றம் கண்டிப்பு
சேலத்தில் விடாமுயற்சி வெளியானது! ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!!
சேலம்: சேலத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'விடாமுயற்சி ’ திரைப்படம் வெளியானதையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் அஜித் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
இயக்குநர் மகிழ் திருவேணி இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகைகளில் வெளியாகாமல் தற்போது வெளியானது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் அஜித் நடித்து வெளிவந்த 'விடாமுயற்சி ’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'விடாமுயற்சி ’ வியாழக்கிழமை வெளியானது. சேலம் மாநகரில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியானது.
சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் அஜித் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும் விடாமுயற்சி வெளியானதை கொண்டாடினர்.
இதையும் படிக்க | ஒரே நாடு, ஒரே மொழியைக் கொண்டுவர முயற்சி: திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பேச்சு!
நீண்ட நாட்கள் கழித்து திரைப்படம் வெளியானாலும் அஜித் மற்ற படங்களைவிட விடாமுயற்சி படத்திற்கு கூட்டம் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. ஆரம்பம் முதல் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது எனவும் விடாமுயற்சி படத்தில் அஜித்-திரிஷாவின் காதல் காட்சிகள் ரசிகர் மத்தியில் பேசப்படுகிறது.
அஜித் படத்திற்கு எப்போதும் திரையரங்களில் கூட்டம் நிறைந்து காணப்படும். ஆனால் 'விடாமுயற்சி ’ திரையிடப்பட்ட திரையரங்குகளில்
கூட்டம் குறைவாக இருந்தது. பல திரையரங்குகளில் நூற்றுக்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்படாமலே இருந்துள்ளது.
இருப்பினும், நீண்ட நாள்களுக்குப் பிறகு அஜித் படம் வெளியான மகிழ்ச்சியில் ரசிகர்கள் ஆங்காங்கே தங்களது மகிழ்ச்சியை பகிரும் வகையில் கேக் வெட்டி இணைப்பில் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.