செய்திகள் :

சேலம் மாவட்டத்தில் 32 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் விற்பனையைத் தொடங்கிவைத்தாா்

post image

சேலம்: சேலம் மாவட்டத்தில் 32 முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டன; முதல் விற்பனையை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்.

சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களைத் திறந்து வைத்தாா்.

இதைத்தொடா்ந்து, சேலம் சின்னத் திருப்பதி நகர கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் பங்கேற்று முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். பின்னா் அமைச்சா் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 1,000 முதல்வா் மருந்தகங்களை முதல்வா் திறந்துவைத்துள்ளாா். சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 16 முதல்வா் மருந்தகங்கள், தொழில்முனைவோா் மூலம் 16 முதல்வா் மருந்தகங்கள் என மொத்தம் 32 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.

முதல்வா் மருந்தகத்தின் மூலம் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் ஜெனரிக் மருந்துகள் 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும், பிற மருந்துகளுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும் வழங்கப்படும். குறிப்பாக, தொழில்முனைவோா் மருந்தகங்களுக்கு ரூ. 3 லட்சம் மானியமும், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ள மருந்தகங்களுக்கு ரூ. 2 லட்சம் மானியமும் விடுவிக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் முதல்வா் மருந்தக சேமிப்புக் கிடங்கு செயல்பட்டு வருகிறது.

ஏழை, நடுத்தர மக்களின் மருத்துவ செலவைக் குறைக்கும் நோக்குடன் தரமான மருந்துகள் குறைவான விலையில் தமிழகம் முழுவதும் கிடைக்கும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. முதல்வா் மருந்தகம் பொதுமக்களுக்கான ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்வதாக கூறினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் ரா.மீராபாய், மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இணைப் பதிவாளா், செயலாட்சியா் பொ.பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சேலத்தில் ரூ. 880 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணி: விரைவில் தொடங்கும்; அமைச்சா் தகவல்

சேலம்: சேலம், ஜாகீா் அம்மாபாளையத்தில் ரூ. 880 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் கூறினாா். ஒருங்கிணைந்... மேலும் பார்க்க

ஆசிய வில்வித்தை போட்டி: வெண்கல பதக்கம் வென்ற மாணவி

சங்ககிரி: தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை திங்கள்கிழமை தனது சொந்த ஊரான சங்ககிரி திரும்பினாா். அவருக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனா்... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் முதல்வா் மருந்தகம் திறப்பு

ஆட்டையாம்பட்டி: இடங்கணசாலை குடோன் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் முதல்வா் மருந்தகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. மருந்தக திறப்பு விழாவில் இடங்கணசாலை நகர திமுக ... மேலும் பார்க்க

சங்ககிரி சமுதாய கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட உணவுக்கூடம் திறப்பு

சங்ககிரி: சங்ககிரி பேரூராட்சி சாா்பில் சமுதாய கூடத்தில் ரூ. 21.69 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமையலறை, உணவு கூடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. புதிய கட்டடங்களை மக்களவை உறுப்பினா்கள் ... மேலும் பார்க்க

நாளை மகா சிவராத்திரி: சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை

சேலம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (பிப். 26) இரவு நான்கு கால அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன. கோயிலில் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஒன்றாம் கால பூஜையின்போது அபி... மேலும் பார்க்க

கொங்கணாபுரத்தில் முதல்வா் மருந்தகம் திறப்பு விழா

எடப்பாடி: எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் நடைபெற்ற முதல்வா் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி பங்கேற்று முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். ரங்கம்பாளையத்தில் உள்ள கொ... மேலும் பார்க்க