செய்திகள் :

"சேலம் 'Fake Wedding' நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்" -வேல்முருகன் காட்டம்

post image

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் நடைபெறுவது போல், சேலம் மாநகரில் 'பேக் வெட்டிங்' இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன.

திருமண விழா கொண்டாட்டத்தை திருமணம் ஏதும் நடைபெறாமலே போலியாக நடத்தி, திருமணத்தில் பங்கேற்பதைப் போன்ற ஆடைகள், விருது, வரவேற்பு, கொண்டாட்டம் என வெளிநாடுகளில் இந்த நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இப்போது இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இது பரவி வருகிறது. இளைஞர்கள் நண்பர்கள், உறவினர்களின் திருமணத்திற்குச் சென்று கொண்டாடி மகிழ்வைப்போல இதில் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

Fake wedding
ஃபேக் வெட்டிங் போஸ்டர்

இந்நிலையில் இது கலாசார சீரழிவு என்று கண்டித்திருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், "சேலம் மாவட்டத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் வருங்கால இளைய தலைமுறையினரின் வாழ்க்கை தடம் மாறி செல்வதற்கு வாய்ப்பாக அமைகிறது.

அதாவது, மாணவர்கள், இளைஞர்கள் தங்களுடைய தனித்திறமைகளை கல்வி, விளையாட்டு, கலை, விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை, புதுமைகளை செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துதல், திறமைகளை வெளிப்படுத்துதல் போன்ற சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தினால், அது எதிர்கால இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.

ஆனால், வியாபார நோக்கத்துடன், கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரால் நடுத்தெருவில் ஆபாச கூத்தும், கும்மாளமும் ஆடல், பாடல் என்ற பெயரில் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும், 'ஃபேக் வெட்டிங்க்' மற்றும்ம் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அனுமதி வழங்குவது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னால் வணிக நோக்கமும், கலாச்சாரத்தை சீரழிக்கும் நோக்கமும் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். இதன் காரணமாக, சேலத்தில் இன்று நடைபெறும், 'ஃபேக் வெட்டிங்க்' நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி சார்பில், காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே இதனைக்கருத்தில் கொண்டு, தமிழ் சமூகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் “ ஃபேக் வெட்டிங்க்” நிகழ்ச்சிக்கு, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தடை விதித்து, வருங்கால சந்ததியினர் வளமாக வாழ வழி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது." என்று எக்ஸ் தளத்தில் கண்டித்திருக்கிறார்.

"நரித்தனம்; கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை" - டிடிவி காட்டம்!

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க ... மேலும் பார்க்க

``குழந்தைகளுக்கு கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்தை கொடுக்க வேண்டாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாக கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துகளை சாப்பிட்ட 11 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டைச் சே... மேலும் பார்க்க

11 குழந்தைகள் உயிரிழந்திருப்பு; கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்தை எழுதிக் கொடுத்த டாக்டர் கைது

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் 11 குழந்தைகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை... மேலும் பார்க்க

"முதல்வர் ஸ்டாலின் பொறுப்போடு செயல்பட்டார்; பழிதீர்க்கும் நோக்கமில்லை; ஆனால் விஜய்" - டிடிவி தினகரன்

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.இதுகுறித்து விசாரிக்க இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அற... மேலும் பார்க்க

"விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக திட்டம்” - சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு, மாடுகள், மரங்களின்மாநாடுகளை தொடர்ந்து, தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு, தஞ்சையில் தண்ணீரின் மாநாடு, தர்மபுரியில் மலைகளின் மாநாடு நடத்தப்போவதாகத் த... மேலும் பார்க்க

"மணிப்பூர் வேறு கரூர் வேறு; விஜய் மன்னிப்புக் கேட்ட பிறகும் பிரச்னை ஏன்?" - குஷ்பு பேட்டி

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து விசாரிக்க இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அ... மேலும் பார்க்க