துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு - பின்னணியில் 2019 வழக்கு?
சேவூா் அருகே பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு
சேவூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், அன்னூா் காக்காபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (59), கட்டடத் தொழிலாளி. இவா் சேவூா் அருகே கருமாபாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
கோபி-அந்தியூரில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக சென்ற தனியாா் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.