ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்ட...
சொந்த மண்ணில் 3,211 நாள்களுக்குப் பிறகு சதம்: கே.எல்.ராகுல் புதிய சாதனை!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம் அடித்துள்ளார்.
இந்திய மண்ணில் சுமார் 3,211 நாள்களுக்குப் பிறகு சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் இந்திய அணி, இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை 218/3 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் நிதானமாக விளையாடிவரும் கே.எல்.ராகுல் 192 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.
சொந்த மண்ணில் முதலிரண்டு சதங்களுக்கான இடைவெளியில் நீண்ட நாள்கள் எடுத்துக்கொண்ட இந்தியர்களில் கே.எல்.ராகுல் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இதற்கு முன்பாக, ஆர். அஸ்வின் 2,655 நாள்களில் (2013, 2021) தனது சதத்தை அடித்திருந்தார்.
தற்போது, உணவு இடைவேளை வரை 67 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 218/3 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 100, துருவ் ஜுரெல் 14 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள்.