Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இ...
சோதனை அடிப்படையில் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் விற்பனை: அமைச்சா் தகவல்
சென்னை: ஆவினில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் பாக்கெட்டுகளை சோதனை அடிப்படையில் ஒரு சில ஒன்றியங்களில் மட்டும் விற்பனை செய்யவுள்ளதாக பால்வளத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்கள் உடல் நலத்துக்கு ஏற்றவாறு வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு, அனைவரும் விரும்பும் வகையில் புதிய வகை கிரீன் மேஜிக் பிளஸ் பால் சோதனை அடிப்படையில் சில ஒன்றியங்களில் மட்டும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த பால் பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும். மேலும், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகை பாலின் விற்பனை அளவை குறைக்க வில்லை என்று அதில் தெரிவித்துள்ளாா் அமைச்சா்.