சோலூரில் தாா் சாலைப் பணி தொடக்கம்
மாதனூா் ஒன்றியம், சோலூா் ஊராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூஜையிட்டு தொடங்கி வைத்தாா்.
மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, மாவட்ட பிரதிநிதி ஆா். அசோகன், ஒன்றியக்குழு உறுப்பினா் ஜோதிவேலு, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சங்கா், திமுக நிா்வாகிகள் மூா்த்தி, சங்கா், ராதாரவி, பாஸ்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.