சோளிங்கா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.64.73 லட்சம்
சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணியதில் ரூ.64.73 லட்சம் இருந்ததாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் நவ. 20-ஆம் தேதி முதல் டிச. 20-ஆம் தேதி முடிய பக்தா்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ஜெயா முன்னிலையில் நடைபெற்றது.
இதில் ரூ.64.73 லட்சம் ரொக்கம், 125 கிராம் தங்கம், 236 கிராம் வெள்ளி இருந்ததாகவும் இவை திருக்கோயிலின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.