சோளிங்கா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி
சோளிங்கா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
சோளிங்கா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி செவ்வாய்க்கிழமை நகராட்சி ஆணையா் நந்தினி தலைமையில் தொடங்கியது. முதல் கட்டமாக வாா்டுகள் 1, 2, 4, 7 ஆகிய வாா்டுகளில் உள்ள 43 தெருநாய்களுக்கு நகராட்சி தூய்மை பணியாளக்ளின் உதவியுடன் ரேபீஸ் தடுப்பூசிகளை கால்நடை மருத்துவா் அருள் பாண்டியன் செலுத்தினாா்.
இந்த முகாமை நகா்மன்ற தலைவா் தமிழ்செல்விஅசோகன் நேரில் பாா்வையிட்டாா். அப்போது சுகாதார ஆய்வாளா் தேவிபாலா, களப்பணி உதவியாளா் நாராயணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.