Weekly Horoscope: வார ராசி பலன் 27.7.25 முதல் 2.8.25 | Indha Vaara Rasi Palan | ...
``சோழர்கள் வளர்த்த காவித்தமிழ்; ஸ்டாலின் ஏன் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்?'' - தமிழிசை கேள்வி
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரவிருக்கிறார். இன்றிரவு தூத்துக்குடி விமான நிலையம் வரவிருக்கும் அவரை வரவேற்க செல்கையில் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

அப்போது அவர் பேசியதாவது, 'வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய நாட்டின் பெருமை. ஆனால், சிலர் இங்கே பிரிவினைவாதம் பேசுகிறார்கள். நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கிறார்கள். இங்கே பெரிய புராணம்தான் பேசப்பட வேண்டும், பெரியார் புராணம் அல்ல. சோழர்கள் ஆன்மிகத்தோடு சேர்த்து தமிழை வளர்த்தார்கள். அதனால்தான் காவித்தமிழ் என்கிறேன்.
சோழகங்கம் ஏரிக்கு தமிழக முதல்வர் 12 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார். பிரதமர் வருகிறார் என்றவுடன்தான் முதலமைச்சரே கங்கைகொண்ட சோழபுரத்தைப் பற்றி சிந்திக்கிறார். தமிழகத்தைப் பற்றி தமிழக முதல்வர் சிந்திப்பதை விட பிரதமர் மோடி அதிகமாக சிந்திக்கிறார்.
பாஜகவைப் பற்றி வீடு வீடாக சென்று சொல்லுங்கள் என ஸ்டாலின் கூறுகிறார். ஆம், நாங்கள் இன்றைக்கு தொடங்கி வைக்கும் திட்டங்களைப் பற்றியும் மக்களிடம் சொல்லுங்கள்.

தனியார் மருத்துவமனையில் உட்காந்துகொண்டு 'உங்களுடன் ஸ்டாலின்' என முதல்வர் பேசிக் கொண்டிருக்கிறார். ஏன், அரசு மருத்துவமனையில் உட்காந்து கொண்டு 'உங்களுடன் ஸ்டாலின்' என பேசலாமே. அரசு மற்றும் தனியார் இரண்டு மருத்துவமனைகளிலுமே ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதானே அரசின் நோக்கம்? செந்தில் பாலாஜியின் சகோதரர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.
மோடி அவர்கள் அரசு மருத்துவமனையில்தான் தடுப்பூசி போட்டுக் கொண்டார். முதல்வர் ஸ்டாலினோ தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். கிட்னி திருட்டை திருட்டல்ல முறைகேடுதான் என சுகாதார அமைச்சர் கூறுகிறார்.
பாலியல் தொந்தரவு, கொலை, கொள்ளை என அத்தனையிலும் திமுக நிர்வாகிகளின் பங்கு இருக்கிறது. பீகாரில் நடந்து கொண்டிருப்பது சீர்திருத்தம். இறந்தவர்களின் பெயரைத்தான் நீக்கிக் கொண்டிருக்கிறார்கள். வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தமிழகத்திலும் செய்ய வேண்டும்." என்றார்.