செய்திகள் :

ஜன நாயகன் படப்பிடிப்பை முடித்த விஜய்?

post image

நடிகர் விஜய் ஜன நாயகன் படத்தில் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். ஆக்சன் படமாகவும் அதேநேரம் சமூக பிரச்னையைப் பேசும் படமாகவும் இது உருவாகி வருகிறதாம்.

அண்மையில், பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

நடிகர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன். 22 ஆம் தேதி ஜன நாயகன் படத்தின் டீசரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளனராம்.

இந்த நிலையில், நேற்றுடன் (ஜூன். 2) விஜய் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே அவரின் கடைசி படமென்பதால் ரசிகர்களுக்கு இத்தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: கமல் மன்னிப்புக் கேட்க 24 மணி நேரம் கெடு!

முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற உஸ்பெகிஸ்தான், ஜோர்டான்!

முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்கு ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன. ஃபிபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம்... மேலும் பார்க்க

கின்னஸ் சாதனைப் படைத்தார் டாம் க்ரூஸ்!

மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கானிங் திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் மூலம் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்த ஹாலிவுட் நடிக... மேலும் பார்க்க

மன்னிப்புக் கேட்டால் தடை நீக்கம்... மறுத்த சின்மயி!

பாடகி சின்மயி தன் மீதான தடையை நீக்க மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார்கள் எனப் பேசியுள்ளார். மீ டு மூலம் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த சின்மயிக்கு துறை ரீதியாக பல சிக்கல்கள் எழுந்தன. மறைமுகமாக, அவருக்க... மேலும் பார்க்க

சொல்லியடித்த கில்லி..! தங்கப் பந்து விருதுக்கு முந்தும் லாமின் யமால்!

”பிரேசிலுடன் வென்றால்தான் விருது தருவார்களெனில் அதையும் செய்வேன்” எனக் கூறி, சொன்னபடியே சிறப்பாக விளையாடிய லாமின் யமால் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். ஸ்பெயினைச் சேர்ந்த 17 வயது கால்பந்து வீரர் லாமி... மேலும் பார்க்க

உலகப்புகழ் பெற்ற நடிகர் காலமானார்!

பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற நடிகர் என்சோகாலமானார். இயக்குநர் விக்டோரியோ டிசிகா இயக்கத்தில் 1948 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பைசைக்கிள் தீவ்ஸ். உலகப்போருக்குப் பின்பான வேலையில... மேலும் பார்க்க

மே மாதத்திற்கான சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வு..! ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்டர் மியாமி வீரர் லியோனல் மெஸ்ஸி மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) இன்டர் மியாமி அணிக்காக 2023 முதல் விளையாடி வருகிறார். மெஸ்சி அசத்தலால் ... மேலும் பார்க்க